மத்திய மந்திரியின் இந்த பேச்சுக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் வரிகளை பகிர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
இன்பத் திராவிடத்தில் இந்திமொழியே - நீ இட்டஅடி வெட்டப்படும்
இந்திமொழியே துன்பம் கொடுக்கவந்த இந்திமொழியே - உன் சூழ்ச்சி பலிப்பதில்லை எம்மிடத்திலே!
எம்மிடத்திலே! அன்பின் தமிழிளைஞர் தாய்அளித்திடும் - நல் அமுதத் தமிழ்மொழிக்கு வாய்திறக்கையில் உன்னைப் புகட்டுவது கட்டாயமெனில் - உனை ஒழிப்பதும் எங்களுக்குக் கட்டாயமன்றோ?.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக