சம்பவத்தின் போது துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும், திட்டமிட்ட குற்றவாளியுமான “கணேமுல்ல சஞ்சீவ” சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
பூசா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த “கணேமுல்ல சஞ்சீவ” இன்று (19) காலை நீதிமன்ற நடவடிக்கைகளுக்காக சிறை அதிகாரிகளால் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்கிடையில், நீதிமன்ற வளாகத்திற்குள் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட ரிவால்வர் வகை துப்பாக்கியையும் போலீசார் கண்டுபிடித்துள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக