வெள்ளி, 31 ஜனவரி, 2025

அமெரிக்க இந்திய மாணவர்கள் பரிதவிப்பு!

உள்ளூர் மக்கள் (அமெரிக்கர்கள்) பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில் பணிபுரிந்தால், அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 30 டாலர் சம்பாதிப்பார்கள். 

அதே இந்திய மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 10 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.அமெரிக்க கல்வி நிறுவனங்களில் படித்துக் கொண்டே ‘பார்ட் டைம் ஜாப்’ பார்க்கும் இந்திய மாணவர்களை குறிவைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதால், அவர்கள் வேலையிழக்கும் அபாயத்தில் உள்ளனர். 

மேலும் இதனால் மாணவர்களின் பெற்றோருக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பின்னர் இந்திய ரூபாய்க்கு எதிரான அமெரிக்க டாலரின் மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது; மறுபுறம், அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களில் பெரும்பலானோர் பகுதி நேர வேலை (பார்ட் டைம் ஜாப்) செய்து அதன் மூலம் கிடைக்கும் வருவாயை கொண்டு தங்களது செலவினங்களை சமாளித்து வருகின்றனர். 

தற்போது அவர்களின் நிலைமை அவர்களின் பெற்றோர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் நிலையில், பகுதி நேரமாக வேலை பார்த்துக் கொண்டே படிக்கும் மாணவர்களையும் அதிகாரிகள் கண்காணித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதே வேலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக பகுதி நேர வேலை செய்து படித்து வரும் மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவர்களின் ‘அமெரிக்க கல்வி கனவு’ பாதிக்கப்படும் என்கின்றனர். 

அமெரிக்க சட்ட விதிகளின்படி, எஃப்-1 விசாவில் படிக்க வரும் மாணவர்கள் வாரத்திற்கு 20 மணி நேரம் தங்கள் கல்வி நிறுவனத்தில் ‘வளாகத்தில்’ வேலை என்ற பெயரில் பகுதிநேர வேலை செய்யலாம். கோடை விடுமுறை மற்றும் செமஸ்டர் விடுமுறைகளின் போது, வாரத்திற்கு 40 மணி நேரம் வரை வேலை செய்யலாம். அதேநேரம் வளாகத்திற்கு வெளியே பகுதி நேர படிப்பு அனுமதிக்கப்படாது. 

சில இடங்களில் மாணவர்களில் பெரும்பாலோர் வளாகத்திற்கு வெளியே பகுதி நேர வேலைகளைச் செய்கிறார்கள். உள்ளூர் மக்கள் (அமெரிக்கர்கள்) பல்பொருள் அங்காடிகள், பெட்ரோல் நிலையங்கள், ஓட்டல்கள் போன்றவற்றில் பணிபுரிந்தால், அவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 20 முதல் 30 டாலர் சம்பாதிப்பார்கள். அதே இந்திய மாணவர்கள் ஒரு மணி நேரத்திற்கு 6 முதல் 10 டாலர் வரை சம்பாதிக்கிறார்கள்.

 அதனால்தான் இந்திய மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவ்வாறாக பகுதி நேர பணியில் ேசர்ந்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் மாணவர்கள், தங்களது கல்விச் செலவில் பெரும் பகுதியை அங்கிருந்து கொண்டே சமாளித்துக் கொள்கின்றனர். 

அவர்களின் பெற்றோருக்கு பெரும் நிதிச் சுமையும் குறைகிறது. ஆனால் இதுபோன்ற முறைகளை ‘மோசடி’ என்று அந்நாட்டு சட்டங்கள் கூறுகின்றன. எனவே பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டே கல்வி கற்பவர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களாக அடையாளப் படுத்தப்பட்டு வருகின்றனர். அதனால் அதுபோன்ற மாணவர்களையும் அடையாளம் காண அதிகாரிகள் விரிவான சோதனைகளை நடத்தி வருகின்றனர். 

அவ்வாறு அவர்கள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு அவர்கள் வீட்டிற்கு (இந்தியா) அனுப்பப்படுவார்கள். அவ்வாறு நடந்தால், மீண்டும் அமெரிக்காவுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். 

எனவே பகுதிநேர வேலை பார்த்துக் கொண்டே கல்வி கற்கும் ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். அமெரிக்க அரசின் கெடுபிடிகளை உணர்ந்து பகுதி நேர வேலைகளை செய்து வந்த மாணவர்களில் பலர், தங்களது வேலையை விட்டு வெளியேறுகிறார்கள். அதேநேரம் அடுத்த சில மாதங்களுக்குப் பிறகு, விஷயங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கின்றனர்.

 அதுவரை, அவர்கள் இந்தியாவில் உள்ள தங்கள் பெற்றோரை அழைத்து, மாதாந்திர வீட்டு வாடகை, உணவு மற்றும் பிற செலவுகளுக்கு பணம் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆண்டு படிப்புக்கு சுமார் ரூ.50 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் செலவாகும் என்பதால், தங்களது பெற்றோரை மாணவர்கள் எதிர்நோக்கி உள்ளனர். இந்திய நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பல மாணவர்கள் அமெரிக்காவில் கல்வி கற்க சென்றுள்ளதால், அவர்களின் பெற்றோர் பெரும் நிதிச் சுமைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 

அமெரிக்க அரசால் வெளியிடப்பட்ட சமீபத்திய அறிக்கையின்படி, ‘கடந்த 2023-24ம் ஆண்டில் சர்வதேச மாணவர்கள் பட்டியிலில் இந்தியா முதலிடத்தில் இருக்கும். அமெரிக்காவில் உள்ள 11.26 லட்சம் வெளிநாட்டு மாணவர்களில் 3.30 லட்சம் பேர் இந்தியர்கள். இது ஒவ்வொரு 100 சர்வதேச மாணவர்களில் சுமார் 30 ஆகும். இவர்களில் 56% பேர் தெலங்கானா மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும் உலகளாவிய கல்வி ஆலோசகர்களின் நிர்வாக இயக்குனர் வி.ஆர்.உடுமுலா கூறுகையில், ‘அமெரிக்காவில் ஒரு ஓட்டலில் 10 ஊழியர்கள் வேலையில் இருந்தால், அவர்களில் ஏழு பேர் பகுதி நேர ஊழியர்கள். இவ்வாறு பகுதிநேர ஊழியர்களாக வேலை செய்பவர்களில் பாதி பேர் மாணவர்களாக உள்ளனர். இப்போது கெடுபிடிகள் அதிகரித்து வருவதால், பகுதிநேரமாக வேலைபார்த்தவர்கள் ஒரே நேரத்தில் வெளியேறி வருகின்றனர்.

இதனால் ஓட்டல் வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். உணவகங்கள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டால், உள்ளூர் மக்கள் வெகுவாக பாதிக்கப்படுவார்கள். வரும் ஏப்ரல் வரை இந்த கெடுபிடிகள் இருக்கும் என்று நினைக்கிறோம். 

 அதன்பிறகு, நிலைமை மாற வாய்ப்புள்ளது’ என்றார். இதுகுறித்து அமெரிக்க குடிவரவு அதிகாரிகள் வட்டாரங்கள் கூறுகையில், ‘கல்வி நிறுவன வளாகத்திற்கு வெளியே பகுதி நேர வேலைகளைச் செய்யும் மாணவர்கள் மீது அமெரிக்க குடிவரசு அதிகாரிகள் ஒரு கண் வைத்திருக்கிறார்கள். அவர்கள் மீதான விசாரணை எப்போது தொடங்கும் என்று தெரியவில்லை. 

அதேநேரம் கல்வி நிறுவன வளாகத்திற்கு உள்ளே பகுதி நேர வேலை பார்க்கும் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாது. கல்வி நிறுவனத்திற்கு வெளியே இருக்கும் ஓட்டல் உள்ளிட்ட நிறுவனங்களில் பகுதி நேர வேலை பார்க்கும் மாணவர்கள் பிடிபட்டால், அவர்கள் அவர்களின் நாட்டிற்கு திருப்பி அனுப்பப்படுவார்கள்’ என்று கூறின. மேற்கண்ட தகவல்களை வைத்து பார்க்கும் போது பகுதி நேர வேலை பார்த்துக் கொண்டே அமெரிக்காவில் படித்து வரும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் புதிய சிக்கல்களை எதிர்கொண்டுள்ளனர் என்பது உறுதியாகி உள்ளது. 

பிரிக்ஸ் நாணயம் வெளியிட்டால் 100 சதவீதம் வரி: இந்தியா உள்பட 40 நாடுகளுக்கு டிரம்ப் அச்சுறுத்தல் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டுள்ள பதிவில், ‘பிரிக்ஸ் (இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட) நாடுகள் அமெரிக்க டாலருக்கு எதிராக புதிய நாணயத்தை உருவாக்க முயற்சிக்கின்றன. இந்த நாடுகள் புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டாலருக்கு எதிராக வேறு எந்தவொரு நாணயத்தையும் ஆதரிக்க கூடாது என்று விரும்புகிறோம். 

அவ்வாறு நடந்து கொள்ளவில்லை என்றால், பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீதம் வரி விதிக்கப்படும். மேலும் இந்த நாடுகளுக்கான அமெரிக்க சந்தைகளின் கதவுகள் மூடப்படும். அவர்கள் வேறு வௌிநாட்டு சந்தையை தான் தேட வேண்டும். எனவே பிரிக்ஸ் நாடுகள் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளை நடைமுறைக்கு கொண்டு வந்தால், அவர்கள் பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

சர்வதேச சந்தையில் அமெரிக்க டாலரை மாற்றாக வேறு நாணயத்தை கொண்டு வர முடியாது என்பதை பிரிக்ஸ் நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். முன்னதாக கடந்த 2022ம் ஆண்டில் நடைபெற்ற 14வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பேசுகையில், ‘பிரிக்ஸ் நாடுகள் தங்களுக்கு என்று தனியாக சர்வதேச நாணயத்தை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளன’ என்றார். 

இதற்கு பிரிக்ஸ் நாட்டில் அங்கம் வகிக்கும் பல நாடுகள் ஆதரவு அளித்தன. தற்போது பிரிக்ஸ் அமைப்பில் சேர 40 நாடுகள் ஆர்வம் காட்டியுள்ளதாக தென்னாப்பிரிக்காவின் பிரிக்ஸ் தூதர் அனில் சுக்லால் தெரிவித்தார். பிரிக்ஸ் அமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளன. துருக்கி, அஜர்பைஜான், மலேசியா ஆகிய நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் சேர விண்ணப்பித்துள்ளன. 

மேலும் பல நாடுகளும் சேர விருப்பம் தெரிவித்துள்ளன. இருப்பினும், அமெரிக்க டாலர் தான் சர்வதேச அளவில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் நாணயமாகும். உலகளாவிய நிதி அமைப்பில் அமெரிக்காவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தவே பிரிக்ஸ் நாடுகள் தங்களது பொருளாதாரம் சார்ந்த நலன்கள் குறித்து சிந்திக்க தொடங்கியுள்ளன. 

அதன் விளைவு தான் ‘பிரிக்ஸ் நாணயம்’ என்ற புதிய அறிவிப்பாகும். இந்த அறிவிப்பு அமெரிக்காவிற்கு பெரும் குடைச்சலை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு.

இ ங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு குற்றங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன, இத...