வெள்ளி, 31 ஜனவரி, 2025

மாத்தறையில் மர்மமான முறையில் பெண் கொலை!!

கம்புருபிட்டிய பொலிஸ் பிரிவில் இன்று (31) அதிகாலை 3.30 மணியளவில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதத்தின் காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வௌியிட்டனர். 

தற்போதைய விசாரணைகளில் இந்தக் கொலை கத்தி மற்றும் இரும்புக் கம்பியால் செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. உயிரிழந்தவர் 34 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும், அவர் ஒரு ஆசிரியை என்றும் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட நபர் தொடர்பில் இன்னும் தகவல்கள் வௌியாகவில்லை.

இருப்பினும், கொலைக்கான சந்தேகத்தின் பேரில் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண்ணின் தாயார், தானே இந்தக் கொலையை செய்ததாகக் கூறி பொலிஸாருக்கும், சந்தேகநபரான மகனுக்கும் எழுதிய கடிதமொன்றையும் பொலிஸார் சடலத்திற்கு அருகிலிருந்த மேசையிலிருந்து கண்டெடுத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கம்புருபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு.

இ ங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஒரு வருடத்தில் கிட்டத்தட்ட அரை மில்லியன் கடைத் திருட்டு குற்றங்கள் காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளன, இத...