புதன், 8 ஜனவரி, 2025

வேலைநிறுத்தம் இல்லை - பஸ் சங்கங்கள் தீர்மானம்.

Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட போக்குவரத்து சோதனை நடவடிக்கைகள் தொடர்பில் இன்று (08) தனியார் பஸ் சங்கங்களுக்கும் பதில் பொலிஸ்மா அதிபருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக பஸ் சங்கங்கள் தெரிவிக்கின்றன. இதன்படி, நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கவிருந்த வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொள்வதில்லை என பஸ் சங்கங்கள் தீர்மானித்துள்ளன. பொலிஸாரின் வரம்பு மீறல் மற்றும் தேவையற்ற அழுத்தங்களை பஸ்கள் மீது பிரயோகிப்பதை கண்டித்து நாடு தழுவிய ரீதியில் இந்த வேலைநிறுத்தத்தை முன்னெடுக்க பஸ் சங்கங்கள் நேற்று இணக்கம் தெரிவித்திருந்தன. இவ்வாறானதொரு பின்னணியில் இன்று காலை பொலிஸ் தலைமையகத்தில் பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவுடன் பஸ் சங்கப் பிரதிநிதிகள் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதனையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதில்லை என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

இரணைமடு குளத்தின் வான் கதவுகள் திறப்பு!!

கிளிநொச்சியின் மாங்குளம் கனகராயன்குளம் ஆகிய பிரதேசங்களில் பெய்து வருகிற கனமழை காரணமாக அதிகளவான நீர் இரணைமடு குளத்துக்கு வந்து கொண்டிருக்கிறம...