கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகள், உணவுக்கழிவுகள் உள்ளிட்டவை எல்லையை தாண்டி கன்னியாகுமரி மட்டுமின்றி திருநெல்வேலி உட்பட பல்வேறு பகுதிகளில் கொட்டுவது வாடிக்கையாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இதையடுத்து தமிழ்நாடு அரசு அப்பகுதிகளில் கண்காணிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
கடந்த ஒரு வாரமாக பல்வேறு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தமிழக – கேரள எல்லையான பனச்சமூடு பகுதியில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும்போது 5 வாகனங்கள் அப்பகுதியில் வந்தது. அதனை சோதனை தனிப்படை போலீசார் செய்ததில் அதில் இறைச்சி கழிவுகள், கோழி கழிவுகள் மற்றும் காய்கறி கழிவுகள் உட்பட பல்வேறு கழிவுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கழிவுகளை கொண்டு வந்த வாகனங்களை பறிமுதல் செய்து கனகராஜ், தினேஷ்குமார், ஐயப்பன், சைனு, சாகுல் ஹமீது, சிண்டோ, பிஜு, தர்ஷன், தவுரக் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலு இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கோடனு வருகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக