வெளி ஆட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. காவல்துறையினரின் கண்காணிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு அங்கே அதிகப்படுத்தப்பட்டது.
துவாரகாவில் இருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த தீவில் உள்ள குடியிருப்பு கட்டடங்களும், மத வழிபாட்டுத்தலங்களும் இடிக்கப்பட்டுள்ளன.
அதிகாரிகள் இது குறித்து கூறும் போது, சட்டத்திற்கு புறம்பாக நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகின்றனர்.
வழிப்பாட்டுத் தலங்களைக் கொண்ட தீவான பெட்-துவாரகா, குஜராத்தின் தென்மேற்கு முனையில் அமைந்துள்ளது.
இதற்கு முன்பு இந்த பகுதியை அடைய படகுகள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
குஜராத் தலைநகரான காந்தி நகரில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்த தீவு. மிக சமீபத்தில் குஜராத்தின் இதர பிராந்தியங்களோடு தீவை இணைக்க, சுதர்சன் சேது என்ற பாலம் கட்டப்பட்டது.கடந்த ஜனவரி 11-ஆம் தேதி அன்று இந்த பாலம் மூடப்பட்டது.
சட்டத்திற்கு புறம்பான கட்டடங்கள் இடிக்க இருப்பதை தொடர்ந்து புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் நான்கு நாட்கள் அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த சூழலை பெரிதாக்காமல் இருப்பதற்காக சாலைகள் மூடப்பட்டன என்று கூறுகின்றனர் அதிகாரிகள்.
பாலப்பர் பகுதியில் உள்ள வீடுகள் நான்கு நாட்களில் இடித்துத் தள்ளப்பட்டது. ஜனவரி 16-ஆம் தேதிக்குள் முந்நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இடித்துத் தள்ளப்பட்டன.
சிறுபான்மை மதத்தைச் சேர்ந்த மீனவர்களின் வீடுகளும் அவர்களின் மத வழிபாட்டுத் தலங்களும் இதில் அடங்கும்.
புனிதப் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு சாலை மீண்டும் ஜனவரி 15-ஆம் தேதி அன்று திறக்கப்பட்டது. இருப்பினும் கூட பிம்சர் பகுதியில் இரண்டு நாட்களாக வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது.
"அரசு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்ட வீடுகள் அனைத்தும் இடிக்கப்பட்டன," என்று அரசு தரப்பில் கூறப்பட்டது.
ஜனவரி 18, 2025-ல் கிட்டத்தட்ட 9 மத வழிப்பாட்டுத் தலங்கள், மூன்று வணிக வளாகங்கள் உட்பட 525 கட்டடங்கள் பெட்-துவாரகா, துவராகா மற்றும் ஒக்ஹா பகுதிகளில் இடிக்கப்பட்டன. ரூ. 73.55 கோடி மதிப்பு கொண்ட, 1,27,968 சதுர மீட்டர் பரப்பில் கட்டப்பட்ட கட்டடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது
குஜராத்தி. அங்கே மக்கள் இடிபாடுகளில் இருந்து தங்களின் பொருட்களை எடுத்துக் கொண்டிருக்கின்றனர்.
வீடுகளை இழந்த நூற்றுக்கணக்கான மக்களில் இஸ்மாயில்பாய் ரென்க்டிவாலாவும் ஒருவர். அவருடைய மகன் இஸா, மகள் ஜரினா தற்போது செய்வதறியாது தவித்து வருகின்றனர்.
இடிபாடுகளுக்கு மத்தியில் அமர்ந்திருக்கும் அவர், "நாங்கள் படிக்கவில்லை. இந்த வீட்டை நான் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கட்டினேன்.
வீடு கட்ட நாம் நிலம் வாங்க வேண்டும் என்று கூட எனக்கு அப்போது தெரியாது. அப்படியே தெரிந்திருந்தாலும் அதை வாங்கும் அளவுக்கு எனக்கு வசதி இல்லை," என்று தெரிவிக்கிறார்.
"நான் இன்னும் அதிக காலம் உயிர் வாழமாட்டேன். என்னுடைய வீடும் பறிபோய்விட்டது. என்னுடைய குழந்தைகள், பேரக்குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வருத்தமாக இருக்கிறது.
நான் பலரிடம் உதவி கேட்டுக்கிறேன். ஆனால் அரசே என்னுடைய வீட்டை இடிக்கும் போது நான் எங்கே செல்வேன்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.
சுதர்சன் சேது, பாலம் கட்டப்படுவதற்கு முன்பு, வயதான பக்தர்களை ஒரு கரையில் இருந்து படகு மூலம் அழைத்து வந்து கிருஷ்ணர் கோவிலில் விடும் பணியை செய்து வந்தார் இஸ்மாயில். அவருடைய மகன்கள் இருவரும் மீனவர்களாக உள்ளனர்.
இஸ்மாயில் மட்டுமின்றி பலரின் நிலைமையும் இதேதான்.
அஸிஜா பெஹன் அங்கரியா, அவருடைய இடிந்த வீட்டின் முன்பு இரண்டு புத்தகங்களோடு நின்று கொண்டிருக்கிறார். அவருடைய இரண்டு அறைகளை கொண்ட ஒரு வீடும், ஒரு குடிசையும் அரசால் இடிக்கப்பட்டுள்ளது.
அஸிஜாவும் அவருடைய கணவரும் மீன்வலை பின்னும் பணி செய்து வருகின்றனர்.
தற்போது அரசு அனைத்தையும் இடித்துவிட்டதால் மூன்று குடும்பத்தினரும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர்.
மரியம் இது போன்ற சூழலை இரண்டாவது முறையாக சந்திக்கிறார். 2022-ஆம் ஆண்டு தீவின் எல்லையில், பாஜ் பகுதியில் அமைந்திருந்த வீடு இடிக்கப்பட்டது.
வீடில்லாத சூழலில், பாலப்பரில் உள்ள அவருடைய அம்மா வீட்டுக்கு குடும்பத்துடன் வந்தார் மரியம். தற்போது அந்த வீடும் இடிக்கப்பட்டுவிட்டது.
"எங்களுடைய வீடு சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்டிருக்கிறது என்றால் எங்களுக்கு ஏன் தண்ணீர் மற்றும் மின்சார இணைப்பை அரசு தர வேண்டும்?" என்ற கேள்வியை எழுப்புகிறார் அஸிஜா
"நாங்கள் இதற்கு வரி கூட கட்டியுள்ளோம். இப்போதும் எங்கும் செல்ல வழியில்லை," என்று அவர் தெரிவிக்கிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக