புதன், 22 ஜனவரி, 2025

பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் குறித்து சீமான் சொன்னது என்ன?

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் அருகேயுள்ள பூரிக்குடிசை கிராமத்தில் கள் விடுதலை மாநாடு நேற்று நடைபெற்றது. தமிழ்நாடு கள் இயக்கத் தலைவர் நல்லசாமி தலைமை வகித்தார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஏ.ஜி.சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 


இதையொட்டி, பெண்கள் கள் பானையை தலையில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். அப்போது, மாணவிகள் சிலம்பம் ஆடி வரவேற்றனர். தொடர்ந்து, ஒருவர் பனை மரத்தில் ஏறி கள் இறக்கினார். பின்னர், பனை மரத்துக்கு கள் அபிசேகம் செய்யப்பட்டு, படையலிடப்பட்டது. மேலும், சிறுவர்கள் உட்பட அனைவருக்கும் கள் வழங்கப்பட்டது. பனை ஓலையில் கொடுக்கப்பட்ட கள்ளை சீமான் அருந்தினார். இந்த மாநாட்டில் கலந்துகொண்டு சீமான் பேசியதாவது…. 

கள் மது வகையில் வராது. அது நம் உணவு. ரஷ்யாவில் வோட்கா போல தமிழனின் தேசிய பானம் கள். கள் என்று சொல்லாமல் அதை பனஞ்சாறு என்றும் மூலிகைச்சாறு என்றும் சொல்லலாம்.புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் கள் விற்பனை செய்யப்படுகிறது. 

ஆனால், தமிழகத்தில் மட்டும் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் எந்த மாநில முதல்வருக்கும் சாராய தொழிற்சாலை கிடையாது. ஆனால், தமிழகத்தை ஆண்ட முதல்வர்களுக்கும், அவர்களைச் சேர்ந்தவர்களுக்கும் சொந்தமாக சாராய ஆலைகள் உள்ளன. பொங்கலை முன்னிட்டு 2 நாட்களில் ரூ.725 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ்வளவு குடிப்பவர்களுக்கு ஏன் இலவசம் தர வேண்டும்? பொருளாதாரம் குறித்து தெரியாதவர்களிடம் அதிகாரம் இருக்கிறது. ஆனால், எந்த அதிகாரமும் நிரந்தரம் இல்லை. கள் இயக்க விடுதலைக்காக நாம் தமிழர் கட்சி துணைநிற்கும். இவ்வாறு சீமான் பேசினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது… ஈரோடு இடைத்தேர்தலில் திமுக-நாதக இடையேதான் போட்டி நிலவுகிறது.பெரியார், பெரியார் என்று பேசுபவர்கள், பெரியாரைப் பற்றி பேசி ஈரோடு இடைத்தேர்தலில் வாக்கு கேளுங்களேன் பார்க்கலாம். தாலியை அறுத்து எறிய வேண்டும், கோயிலுக்குச் செல்வது காட்டுமிராண்டித்தனம் என்றெல்லாம் பெரியார் பேசியதை அங்கே கூறுங்களேன். 

நாங்கள் பெரியாரை எதிர்ப்பது, மதவாதத்துக்கு ஆதரவானது என்று கூறுகிறார்கள். பெரியார் எந்த மதத்துக்கு எதிரானவர்? மாட்டுப் பால் குடிப்பவன் இடைச் சாதி, மாட்டுக் கறி தின்பவன் கீழ் சாதி, மாட்டு கோமியம் குடிப்பவன் உயர்ந்த சாதி என்பதே நம் நாட்டின் கட்டமைப்பு.

இதிலிருந்து தப்ப அரசியல் புரட்சி மட்டுமே வழி. திராவிடமும், ஆரியமும் ஒன்றுதான். இவ்வாறு சீமான் கூறினார். அப்போது,விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனோடு அவர் இருக்கும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது குறித்து கேட்டனர்.அதற்கு, அதை விடுங்கள் எனச் சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் குறித்து சீமான் சொன்னது என்ன?

தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு சங்கம், தமிழ்நாடு கள் இயக்கம் சார்பில், விழுப்புரம் அருகேயுள்ள பூரிக்குடிசை கிராமத்தில் கள் விடுதலை மாநாடு ந...