சனி, 16 நவம்பர், 2024

தமிழரசுக் கட்சிக்கு வட கிழக்கு மக்கள் வழங்கிய ஆணை-சுமந்திரன்

தமிழரசுக் கட்சிக்கு வடக்கு - கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் பிரதான ஆணையைக் கொடுத்திருக்கின்றார்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் (MA Sumanthiran) தெரிவித்துள்ளார். 

 மக்கள் முன்பாக வந்து தேர்தலில் போட்டியிட்டு மக்களால் நான் தெரிவு செய்யப்படாத சூழலில் தேசியப் பட்டியல் மூலமாக நாடாளுமன்றம் செல்வதை விரும்பவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ். (Jaffna) ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது, கட்சி தாவல்கள் நிறைந்த எங்களுடைய அரசியல் கலாசாரத்திலே தேசிய மக்கள் சக்தி தெட்டத் தெளிவாக வேற கட்சிகளில் இருந்து தங்களுடைய கட்சிக்கு யாரும் வர வேண்டாம் என்றும், தாங்கள் யாரையும் எடுக்க மாட்டோம் என்றும் சொல்லி தனித்து இந்த வெற்றியை ஈட்டியிருக்கின்றார்கள்.ஜனாதிபதித் தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க வெற்றி பெற்றதே வியப்பான விடயமாகப் பலராலும் நோக்கப்பட்டது. 

அதற்கு ஒருபடி மேலே சென்று இப்போது நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் அப்பால் மிகப் பெரியதொரு பெரும்பான்மையை அவர்கள் பெற்றிருக்கின்றார்கள். இந்த இடத்திலே தேசிய மக்கள் சக்தி தங்களுடைய தேர்தல் விஞ்ஞாபனத்திலே மக்களுக்குச் சொன்ன விடயங்களை நாங்கள் ஞாபகப்படுத்த விரும்புகின்றோம். 

 இப்படியாக மக்கள் ஆணை உங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருப்பது முக்கியமாக தேர்தல் அறிக்கை விஞ்ஞாபனத்திலே தாங்கள் குறிப்பிட்ட வாக்குறுதிகளுக்காகவேதான். ஆகையினால் அதைச் செய்து நிறைவேற்றும்படியாக இந்த ஆணை கொடுக்கப்பட்டும் இருக்கின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தமிழீழப் பகுதிகளில் சிங்களக் கட்சி வெற்றி – எப்படி

இலங்கை நாடாளுமன்றம்கலைக்கப்பட்டது. இலங்கை நாடாளுமன்றத்தில் மொத்தம் 225 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 196 பேர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுகின...