வியாழன், 14 நவம்பர், 2024

இனி உங்க கேலி கூத்தான அரசியல் ஆட்டம் செல்லாது!!

நம்ம ஆட்களுக்கு என்ன குட்ட குட்ட குணிவது வழக்கம் தானே என எண்ணி நாடாளுமன்ற தேர்தலில் தாங்கள் கொடி பறக்க போவதாக சில மூத்த வயதான தமிழ் அரசியல்வாதிகள் பகல் கனவில் திளைத்துக்கொண்டிருப்பதை நினைக்க கொஞ்சம் சிரிப்பாகத்தான் இருக்கின்றது. 

ஒன்றல்ல இரண்டல்ல வருடக்கணக்காய் தமிழ் தேசியம், தமிழ் தேசியம் என மக்களின் சுய சிந்தனைணை சிதைத்தவர்களின் வேஷம் எல்லாம், கட்சி துண்டாகி தலைமைத்துவம் சிதைந்து சுயலாப சிந்தனை வெளிவந்ததில் நடுத்தெருவிற்கு வந்து ஒரு காட்டு காட்டிவிட்டது. 

இதனால், இனி நாங்கள் தமிழ் மக்களை காப்பற்ற போகின்றோம் பிறகு நீதி பெற்றுகொடுக்க போகின்றோம் என கூறிகொண்டு திரிவதெல்லாம் “இனி இந்த பருப்பு வேகாது சாமி” என்பதற்குத்தான் சமம்.

விடுதலைப் போரில் அடிபட்டு சிதைந்து வந்த மக்களின் வலியையும் வேதனையையும் தங்களது அரசியல் சூதாட்டத்திற்கு பகடக்காயாக சில அரசியல்வாதிகள் இத்தனை காலம் பயன்படுத்தி காலத்தை ஓட்டினர்.

இருப்பினும், தமிழர் பிரதேசத்தில் தற்போது தொடரும் விளையாட்டுத்தனமான அரசியலை பார்த்த மக்கள் இனியும் குனிந்தால் தட்டி அமர்த்தி விடுவார்கள் என்பதை புரிந்துகொண்டு தெளிந்துள்ளனர்.

இதில் முக்கியமாக ஒன்றை கூற வேண்டுமே அந்த தமிழ் என் மூச்சு, படித்தவர்களை அரசியலுக்கு கொண்டு வர வேண்டுமென பூசி மொழுகும் சில அரசியல்வாதிகள் ஒரு விசயத்தை மறந்து தங்களுக்கான ஒரு தனி உலகில் வசிக்கின்றனர் போல. காரணம், அந்த பிரபல சட்டத்தரணியும் படித்தவர் தானே ? 

அப்போது ஏன் கட்சி சின்னாப்பின்னமாக கிழிந்து நடுத்தெருவில் தொங்குகின்றது ? சரி சரி இதை எதற்கு நினைவுப்படுத்த, அதான் தியேட்டரில் படம் போடுவதை போல இவர்களுடைய அரசியல் கூத்தை மக்களுக்கு அவர்களே வெளிச்சம் போட்டு காட்டி விட்டார்களே. 

 நாளை நாடாளுமன்ற தேர்தல், தெளிவாக சொல்லப்போனால் சிலரின் பல வருட அரசியல் சிம்மாசனம் துண்டாக்கப்படப்போகின்ற நாள் என்று கூட சொல்லாம். காரணம் காலம் காலமாக தமிழ் மக்களை வற்புறுத்தி எழுதப்பட்ட தலையெழுத்தை மாற்றி அமைக்க அவர்கள் கையிலிருக்கும் ஒரு வாய்ப்பாகத்தான் நாளைய தேர்தல் காணப்படுகின்றது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

பாம்புகளின் தீரா பசிக்கு மொத்தமாக அழிந்து போன பறவை இனங்கள்!!

மேற்கு பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள குவாம் தீவில், அதற்கு அருகிலுள்ள தீவுகளுடன் ஒப்பிடும்போது 40 மடங்கு அதிக சிலந்திகள் உள்ளன. மேலும் இந்...