வெள்ளி, 15 நவம்பர், 2024

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் அநுர குமாரவின் வெற்றி!!

இலங்கையின் 10வது நாடாளுமன்றத்திற்கான அனைத்து மாவட்டங்களின் தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. 


அதன்படி, தேசிய மக்கள் சக்தி 141 ஆசனங்களைக் கைப்பற்றி, நாடாளுமன்ற அதிகாரத்தைத் தன்வசப்படுத்தியுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தில் 225 ஆசனங்கள் காணப்படுகின்ற நிலையில், 113 ஆசனங்களை பெற்றுக்கொள்ளும் கட்சி, பெரும்பான்மை அதிகாரத்தைக் கொண்ட கட்சியாகக் கருதப்படும்.

 இந்நிலையில், இந்தத் தேர்தல் முடிவுகளின்படி தேசிய மக்கள் சக்தி இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் 141 ஆசனங்களைத் தன்வசப்படுத்தியுள்ளது. இதேவேளையில், கட்சிகள் பெற்ற வாக்குகளின் அடிப்படையில் தேசிய பட்டியலுக்கான உறுப்பினர்கள் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக் குழுவினால் வெளியிடப்பட வேண்டும்.

 29 உறுப்பினர்கள் கட்சிகளுக்குப் பிரிந்து செல்லும் எண்ணிக்கை தொடர்பான அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.
புதிய ஜனநாயக முன்னணி (NDF) 500,835 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இதன்படி தேசிய மக்கள் சக்தி (NPP) 6,863,186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. 

ஐக்கிய மக்கள் சக்தி (SJB) 1,968,716 வாக்குகளைப் பெற்று 35 ஆசனங்களைப் பெற்றுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சி (ITAK) 257,813 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன (SLPP) 350,429 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) 87,038 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஏனைய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் 941,983 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தடுப்பூசி சந்தேகம் "அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்-டிரம்ப்

"தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்" ஆகியவற்றிலிருந்து பாதுகா...