செவ்வாய், 29 அக்டோபர், 2024

கனடாவில் சீக்கியர் மத்தியில் 'காலிஸ்தான்' ஆதரவு!!

"நாங்கள் பணி செய்ய மட்டுமே போதிய நேரம் கிடைக்கிறது, இதில் காலிஸ்தானைப் பற்றி நாங்கள் எப்போது பேசுவோம்?, நான் மட்டும் அல்ல என்னை சுற்றியுள்ள அனைவரும் செக்கு மாடுகள் போல ஒரே வட்டத்தில் சிக்கியுள்ளோம்", என்று கடந்த நான்கு ஆண்டுகளாக கனடாவின் பிராம்டன் நகரில் வசிக்கும் 30 வயது டாக்ஸி டிரைவர் குர்ஜித் சிங் கூறினார்.

இந்தியா - கனடா இடையிலான ராஜ்ஜீய உறவுகளில் பதற்றம் நிலவும் சூழலில் கனடாவில் அதிக அளவில் பேசுபொருளாகியுள்ள காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தின் தற்போதைய நிலை குறித்து தெரிந்துகொள்ள பிராம்டனில் நான் பேசியவர்களில் குர்ஜித் சிங்கும் ஒருவர். காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தில் பொது மக்களின் பங்கேற்பு குறித்து பேசிய குர்ஜித் சிங், "நாங்கள் 'வார இறுதி சமூகம்' என்ற சமூகத்தில் வாழ்கிறோம். 

எங்கள் பிறந்தநாள் மற்றும் பிற நிகழ்ச்சிகளும் வார இறுதி நாட்களில் மட்டுமே கொண்டாடப்படுகின்றன" என்றார் அவர்.கடந்த ஆண்டு ஜூன் மாதம், காலிஸ்தான் ஆதரவாளரும், சீக்கிய தலைவருமான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சர்ரே நகரில் கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் இந்திய ஏஜென்டுகள் இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். அன்று முதல், இந்தியாவிற்கும் கனடாவிற்கும் இடையிலான உறவுகளில் விரிசல் விடத் தொடங்கியது. இரு நாடுகளும் தத்தமது தூதரக அதிகாரிகளை வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விலக்கிக் கொண்டனர். அக்டோபர் மூன்றாவது வாரத்தில், இரு நாட்டு உறவில் பதற்றம் உச்சத்தில் இருந்தது. 

அப்போது, ஒன்டாரியோ பகுதியை சேர்ந்த பல்வேறு மக்களிடம் நான் பேசினேன்,. அவர்களில் பெரும்பாலோர் கேமரா முன் பேச தயாராக இல்லை. நான் பேசியவர்கள் எவரும் காலிஸ்தானுக்கு ஆதரவாக எந்த ஒரு செயல்பாடுகளிலும் ஈடுபடாதவர்கள். ஆம், அவர்கள் அனைவரும் குருத்வாராக்களுக்குச் செல்கிறார்கள், நாகர் கீர்த்தனைகள் பாடுகிறார்கள் மற்றும் விழாக்களில் பங்கேற்கிறார்கள், மற்றும் சொற்பொழிவுகளை கேட்கிறார்கள். கனடாவில் காலிஸ்தான் இயக்கம் எப்படி இருக்கிறது என்பதை பற்றி இந்தியாவில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல நான் வேறு எங்கும் கண்டதில்லை. 

 பல குருத்வாராக்களுக்கு வெளியே காலிஸ்தான் கொடிகள் பறந்துகொண்டிருந்தன அல்லது லங்கார் மண்டபங்களில் 1980-களின் பஞ்சாபை சேர்ந்த ஆயுதக்குழுக்களின் போராளிகளின் படங்களை தவிர வேறில்லை. நான் பஞ்சாபிலும் இதுபோன்ற படங்களை பார்த்திருக்கிறேன் மற்றும் கோஷங்களை கேட்டிருக்கிறேன்.உண்மையில், இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் நிலவியபோது, அதிகம் விவாதிக்கப்பட்ட தலைப்பாக கனடாவின் காலிஸ்தான் இயக்கமும் மற்றும் அதன் தலைவர்களும் இருந்தன. 

 இதற்கு முக்கிய காரணம், கனடாவில் செயல்படும் காலிஸ்தான் ஆதரவு அமைப்புகள் இந்தியாவில் வன்முறை சம்பவங்களில் ஈடுபடுவதாக இந்தியா குற்றம் சாட்டியது. கனடாவில் சீக்கியர்கள் அதிகம் வசிக்கும் ஒன்டாரியோ பகுதியில், இந்த இயக்கத்துடன் தொடர்புடையவர்கள், மூத்த பத்திரிகையாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களிடம் பிபிசி பேசியது. இந்த உரையாடலில், கனடாவில் காலிஸ்தான் தலைவர்களின் உண்மை நிலை என்ன என்பதைப் புரிந்துகொள்ள முயற்சித்தோம். 

 காலிஸ்தான் தலைவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? கனடா அரசியலில் அதன் தாக்கம் என்ன? ஜஸ்டின் ட்ரூடோ போன்ற ஒரு தலைவர் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டுடனான ராஜ்ஜீய உறவுகளை பணயம் வைத்து ஆதரிக்கும் அளவுக்கு அவர்களின் செல்வாக்கு பெரிதா?


கனடாவில் பிரிவினைவாத சீக்கிய இயக்கம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. ஒன்டாரியோ குருத்வாரா கமிட்டி என்பது அங்குள்ள 19 முக்கிய குருத்வாரா அமைப்புகளை உள்ளடக்கிய ஒரு முக்கிய கூட்டமைப்பாகும். கனடாவின் அரசியலில் காலிஸ்தான் இயக்கம் எவ்வளவு செல்வாக்கு செலுத்துகிறது என்பது குறித்து அதன் செய்தித் தொடர்பாளர் அமர்ஜித் சிங் மன்னிடம் கேட்டோம்.

 "இந்திய அரசியல் அமைப்பு அல்லது ஊடகங்கள் காலிஸ்தானை ஒருசில மக்களை மட்டுமே கொண்ட அமைப்பு என்று சொன்னாலோ அல்லது ட்ரூடோ அரசாங்கம் காலிஸ்தான் ஆதரவாளர்களின் வாக்குகளை பெறவே இந்தியாவுடன் மோதுகிறது என்று சொன்னாலோ, அவர்களது முதல் கருத்தே பயனற்றதாகி விடுகிறது", என்று அவர் கூறினார்.


இது குறித்து அமர்ஜித் சிங் மன் கூறுகையில், "கனடாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் ஒரு சிலரே இருந்தால், ட்ரூடோ ஏன் இவ்வளவு முயற்சி செய்ய வேண்டும்? எங்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது மட்டுமே இந்தக் குற்றச்சாட்டு உண்மையாக முடியும்", என்றார். 

 கனடா அரசியலில் காலிஸ்தான் ஆதரவாளர்களின் செல்வாக்கு குறித்து பேசிய அவர், "எங்களுக்கு நிறைய செல்வாக்கு உள்ளது, முன்பு இருந்ததைவிட எங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது", என்றார். "ஆனால் நாங்கள் எந்த ஒரு கட்சியையும் சார்ந்து இல்லை. ஜக்மீத் சிங்கின் NDP கட்சியுடன் எங்களுக்கு நல்லுறவு இருக்கிறது. பொலிவாரின் கன்சர்வேடிவ் கட்சியுடனும் நாங்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறோம்", என்று அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தடுப்பூசி சந்தேகம் "அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்-டிரம்ப்

"தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்" ஆகியவற்றிலிருந்து பாதுகா...