செவ்வாய், 29 அக்டோபர், 2024

அனைத்து வசதிகளும், சலுகைகளும் நீக்கப்படும்!அனுரகுமார திஸாநாயக்க

கடந்த அரச தலைவர்களின் சலுகைகள் மற்றும் நன்மைகள் எதுவாக இருந்தாலும் முற்றாக நீக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மீண்டும் உறுதியளித்துள்ளார்.
காலி, பத்தேகம பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், முன்னாள் ஜனாதிபதிகளை கவனிப்பது மக்களின் கடமையல்ல. சுற்றறிக்கைகள், நாடாளுமன்ற சட்டம் மற்றும் அரசியலமைப்பு ஏற்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அவ்வாறான நன்மைகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்று அவர் கூறினார். 

 “சுற்றறிக்கைகள் மற்றும் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம்,” என்று அவர் கூறினார். “இப்படி ஒரு நாட்டை நாங்கள் நடத்த முடியாது. 163 மெய்க்காவலர்கள் , அம்புலன்ஸ், ஜீப், கார் போன்றவற்றைக் கேட்கிறார்கள். 17 அல்லது 18 BMW வாகனங்களைக் கோருகிறார்கள். இந்த வசதிகள் அனைத்தையும் இல்லாமல் செய்வோம். அரசியல் என்பது மக்களுக்குச் செய்யும் சேவை ஆகும்” என அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிவப்பு வணக்கம்

தடுப்பூசி சந்தேகம் "அமெரிக்காவை மீண்டும் ஆரோக்கியமாக மாற்ற உதவும்-டிரம்ப்

"தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள், மாசுகள், பூச்சிக்கொல்லிகள், மருந்து பொருட்கள் மற்றும் உணவு சேர்க்கைகள்" ஆகியவற்றிலிருந்து பாதுகா...