திங்கள், 27 ஜூலை, 2026

இங்கிலாந்து வான்பரப்பில் கத்தார் ஏர்வேஸ் விமானத்தை வழிமறித்த RAF போர் விமானங்கள்

தோஹாவிலிருந்து மான்செஸ்டருக்குப் பயணித்துக் கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் (Qatar Airways) QR23 (Boeing 777-300ER) பயணிகள் விமானத்தை, பிரித்தானிய அரச விமானப் படையின் (RAF) இரு யூரோஃபைட்டர் டைஃபூன் (Eurofighter Typhoon) போர் விமானங்கள் வழிமறித்துப் பாதுகாப்பாக மான்செஸ்டர் விமான நிலையத்தில் தரையிறக்கியுள்ளன. கடந்த ஜூலை 24 வெள்ளிக்கிழமை மாலை சுமார் 6:00 மணியளவில் தேசிய வான்வழிப் போக்குவரத்துச் சேவைக்குக் (NATS) கிடைத்த போலி மிரட்டல் அழைப்பைத் தொடர்ந்தே இக் வான்வழி அதிரடி நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

பிரித்தானிய அரச பாதுகாப்பு அமைச்சகம் (MoD) மற்றும் கிரேட்டர் மான்செஸ்டர் காவற்துறை (Greater Manchester Police) வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ விபரங்களின்படி RAF Coningsby தளத்திலிருந்து புறப்பட்ட இரு Typhoon FGR4 போர் விமானங்கள், மத்திய இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் (Nottingham) வான்பரப்பில் கத்தார் ஏர்வேஸ் விமானத்தை இடைமறித்து, மான்செஸ்டர் விமான நிலையம் வரை பாதுகாப்பு அணிவகுப்பில் அழைத்து வந்தன.

புத்தளம் பிக்கு கைது - தோளில் தொங்கிய ஹெரோயின் பை

ஹெரோயின் போதைப்பொருளுடன் பௌத்த பிக்கு ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பு - தனியார் பேருந்து நிலையத்தின் 04 ஆவது நடைமேடைக்கு அருகில் உள்ள மலசலக்கூடத்திற்கு அருகில் குறித்த கைது இடம்பெற்றுள்ளது.


இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் புத்தளம் பகுதியில் உள்ள விகாரை ஒன்றில் வசிக்கும் பிக்கு ஆவார்.ஊழல் ஒழிப்பு சோதனைக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை குழுவிற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனையானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த பிக்குவைச் சோதனையிட்ட போது, அவரது தோளில் தொங்கவிடப்பட்டிருந்த பயணப் பையின் ஒளிபுகும் பொலித்தீனால் பொதியப்பட்டு காகிதத்தால் மூடப்பட்ட பொதி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்தப் பொதியைச் சோதித்தபோது, அதற்குள் போதைப்பொருள் இருப்பது தெரியவந்துள்ளது.

சனி, 18 ஜூலை, 2026

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்...!!

இந்தியாவின் விண்வெளித் துறை வரலாற்றில் உள்நாட்டிலேயே தனியார் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்ட, விண்வெளி சுற்றுப்பாதை திறன்கொண்ட முதலாவது தனியார் ஆர்பிட்டல் ராக்கெட்டான விக்ரம் 1 (Vikram-1), சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலுள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக 12.05-க்கு விண்ணில் ஏவப்பட்டது.

இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும். விக்ரம் 1 ராக்கெட்டை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக இதற்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. 

விக்ரம் 1 ராக்கெட் மூலம் கிரஹா ஸ்பேஸ், காஸ்மோ சர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்-ன் SCOPEஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. செயற்கைகோள்கள் திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.


முன்னதாக இன்று காலை சரியாக 11.30 மணிக்கு விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சிறியதொரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட் ஏவும் பணி சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது,

இதனால் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கவுன்டவுன் துவக்கப்பட்டு 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 11 ஜூலை, 2026

வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட சூடு ஈரான் அறிவிக்க வேண்டும் - அமெரிக்கா

ஹோர்முஸ் நீரிணை கப்பல் போக்குவரத்திற்காகத் திறக்கப்பட்டுள்ளது என்பதை ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்கா கோரியுள்ளது. அத்துடன் வர்த்தகக் கப்பல்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை நிறுத்த உறுதியளிக்க வேண்டும் என்றும் இன்றைய பேச்சுவார்த்தைகளின் போது அமெரிக்கா வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

அமெரிக்க மற்றும் ஈரானுக்கு இடையிலான தற்காலிக போர் நிறுத்த உடன்படிக்கை முடிவுக்கு வந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி முன்னதாக கூறியிருந்த போதிலும் அதனை மீண்டும் தொடருவதற்கான இணக்கத்தை நேற்று வௌியிட்டிருந்தார். 

 இதனடிப்படையிலேயே ஈரான் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என அமெரிக்க பிரதிநிதிகள் வலியுறுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. வர்த்தக கப்பல்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு ஒரு தவறு என்பதை ஈரான் தனிப்பட்ட முறையில் ஒப்புக்கொண்டதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

இருப்பினும், ஈரானுக்குள் இருக்கும் ஒரு முரண்பாடான குழுவே இதற்குப் பொறுப்பு என ஈரானியர்கள் தெரிவித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 10 ஜூலை, 2026

மன்னாரில் கேள்விக்கு தவறான பதில் பிஞ்சுக் கன்னத்தில் வடுக்களை ஏற்படுத்திய ஆசிரியர்!


மன்னாரில் உள்ள பிரபல பெண்கள் பாடசாலை ஒன்றில், தரம் 5 இல் கல்வி கற்கும் சிறுமி ஒருவர் வகுப்பாசிரியரால் மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டு, தற்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது! 

 புலமைப்பரிசில் பரீட்சைக்கான விசேட வகுப்பின் போது, ஆசிரியர் கேட்ட கேள்விக்கு அந்த மாணவி தவறான பதிலை அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வகுப்பாசிரியர், சக மாணவர்கள் முன்னிலையிலேயே அந்தப் பிஞ்சுச் சிறுமியின் கன்னத்தில் பலமுறை பலமாக அறைந்துள்ளார். 

 ஆசிரியரின் இந்த மனிதாபிமானமற்ற தாக்குதலால், சிறுமியின் கன்னத்தில் இரத்தக் கசிவு மற்றும் பலத்த காயங்கள் (இரத்தக் கண்டல்கள்) ஏற்பட்டுள்ளன. அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியை மீட்டு உடனடியாக வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். 

அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். தவறு செய்யும் மாணவர்களை நல்வழிப்படுத்த வேண்டிய ஆசிரியர்களே, இப்படி மிருகத்தனமாக நடந்துகொள்வது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று! 

சம்பந்தப்பட்ட ஆசிரியை மீது உடனடியாக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறவினர்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கதிர்காமம் சற்றுமுன் காட்டுக்குள் திறக்கப்பட்ட கதவு மயங்கிய மக்கள்!


யாழில் புற்றுநோய் யாழ்ராணி ரயில் முன் பாய்ந்த பிரபாகரன் (வயது 42)

யாழில் புற்றுநோய் நோயின் வீரியம் தாங்க முடியாத இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து ரயிலில் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். கொழும்புத்துறையைச் சேர்ந்த தங்கவடிவேலு பிரபாகரன் (வயது 42) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 


இவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாகச் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்நிலையில் நோயின் வீரியம் தாங்க முடியாமல், கச்சேரிக்கு முன்பாக உள்ள ரயில் கடவைக்குச் சென்று, அநுராதபுரத்தில் இருந்து வந்த யாழ்ராணி ரயில் முன் பாய்ந்து உயிர் மாய்த்துள்ளார். 

 பின்னர் அவரது சடலமானது ரயிலில் எடுத்துச் செல்லப்பட்டு யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டது. அவரது சடலம் மீதான மரண விசாரணைகளைத் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

Thank You Google

Thank You Google
Thanks