இஸ்ரோவில் இருந்து ஏவப்பட்ட முதல் தனியார் ராக்கெட் இதுவாகும்.
விக்ரம் 1 ராக்கெட்டை தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் (Skyroot Aerospace) என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. இந்திய விண்வெளித் திட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் டாக்டர் விக்ரம் சாராபாயின் நினைவாக இதற்கு 'விக்ரம்' என்று பெயரிடப்பட்டுள்ளது.
விக்ரம் 1 ராக்கெட் மூலம் கிரஹா ஸ்பேஸ், காஸ்மோ சர்வ், டிகியூப்ட் மற்றும் ஸ்கைரூட்-ன் SCOPEஆகிய தொழில்நுட்ப கருவிகள் விண்ணுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. செயற்கைகோள்கள் திட்டமிட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
முன்னதாக இன்று காலை சரியாக 11.30 மணிக்கு விக்ரம் 1 ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடைசி நேரத்தில் சிறியதொரு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட் ஏவும் பணி சற்று நேரம் ஒத்திவைக்கப்பட்டது,
இதனால் கவுன்டவுன் நிறுத்தப்பட்டது. தொழில்நுட்ப கோளாறை சரி செய்யும் பணியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டனர். கோளாறு சரி செய்யப்பட்டதை தொடர்ந்து மீண்டும் கவுன்டவுன் துவக்கப்பட்டு 12.05-க்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக