சனி, 28 பிப்ரவரி, 2026

அனுராதபுரம் கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை!!

சாலியபுர - தெப்பங்குளம் பகுதியில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வீட்டு உரிமையாளருக்கும் வீட்டிற்கு வந்த ஒருவருக்கும் இடையே ஏற்பட்ட தர்க்கம் முற்றியதில், வீட்டு உரிமையாளர் வீட்டிற்கு வந்தவர் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இந்தத் தாக்குதலினால் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு உயிரிழந்தவர் சாலியபுர பிரதேசத்தைச் சேர்ந்த 41 வயதுடையவராவார். 

இச்சம்பவம் தொடர்பாக வீட்டு உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

ஈரானில் அமெரிக்கா போர் நடவடிக்கை டிரம்ப் கூறுகிறார்.

இஸ்ரேல் தாக்குதல்களைத் தொடங்கிய பின்னர், ஈரானில் அமெரிக்கா 'பெரிய போர் நடவடிக்கைகளை'த் தொடங்கியுள்ளதாக டிரம்ப் கூறுகிறார்.ஈரானில் அமெரிக்க இராணுவம் "பெரிய போர் நடவடிக்கைகளை" தொடங்கியுள்ளதாகக் கூறும் டிரம்ப், அந்த நாடு தனது அணுசக்தி திட்டத்தை மீண்டும் கட்டியெழுப்ப முயற்சித்ததாகக் கூறுகிறார்.

இந்த மிகவும் பொல்லாத, தீவிரமான சர்வாதிகாரம் அமெரிக்காவையும் நமது முக்கிய தேசிய பாதுகாப்பு நலன்களையும் அச்சுறுத்துவதைத் தடுக்க அமெரிக்க இராணுவம் ஒரு பெரிய மற்றும் தொடர்ச்சியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அவர்களின் ஏவுகணைகளை அழித்து, அவர்களின் ஏவுகணைத் தொழிலை தரைமட்டமாக்கப் போகிறோம். 

அது மீண்டும் முற்றிலுமாக அழிக்கப்படும். அவர்களின் கடற்படையை நாங்கள் அழிக்கப் போகிறோம். பிராந்தியத்தின் பயங்கரவாத பிரதிநிதிகள் இனி பிராந்தியத்தையோ அல்லது உலகத்தையோ ஸ்திரமின்மைக்கு ஆளாக்க முடியாது.

எங்கள் படைகளைத் தாக்க முடியாது, மேலும் அவர்களின் IEDகளை - அல்லது சில நேரங்களில் சாலையோர குண்டுகள் என்று அழைக்கப்படுவதை - பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்வோம், 

இதில் பல அமெரிக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை இவ்வளவு மோசமாக காயப்படுத்தி கொல்ல முடியாது. ஈரான் அணு ஆயுதத்தைப் பெறாமல் இருப்பதை நாங்கள் உறுதி செய்வோம்.

வெள்ளி, 27 பிப்ரவரி, 2026

AI தொழினுட்பம் பயன்படுத்தப்பட்ட தேனீ வளர்ப்பு!!

எமது AI தொழினுட்பம் பயன்படுத்தப்பட்ட தேனீ வளர்ப்பு செய்வதன் மூலம் பெறும் நன்மைகள் 1.தன்னியக்கமாக கூடுகளின் கண்காணிப்பு மற்றும் அனைத்தக் காலநிலைகளிலும் தேன் உற்பத்தியாகும் 2.மகரந்தச் சேர்க்கை அதிகரிப்பதுடன் மகரந்த பகுப்பாய்வு பெற்றுக் கொள்ள முடியும். 


3.சுற்றுச் சூழலின் ஈரப்பதன், வெப்பநிலை மற்றும் காற்றின் வேகம் அறிந்து தன்னியக்க மேம்படுத்தலை மேற்க்கொள்ளும். 4.கூட்டின் நிகழ்கால தகவல்களை உடனுக்குடன் கைத்தொலைபேசியில் அறிந்து கொள்ள முடியும்.

 5.தேன், தேனீ மற்றும் தேன் மெழுகு ஆகியவற்றை வணிகப்படுத்துவதற்கான ஆலோசனைகள் மற்றும் உதவிகள் தொடர்ச்சியாக வழங்கப்படும். 

6.2 வருடங்களை நிறைவு செய்பவர்களுக்கு வணிகப் பதிவு, 

வங்கிக் கடன் வசதிகள் மற்றும் முதலீடுகள் செய்து தரப்படும் 

 மேலதிக விபரங்களுக்கு: 

~S.Vinoj Kumar Managing Director Invent of Minds (Pvt) Ltd Sri Lanka 
 +94773867722

ஈஸ்டர் தாக்குதல் அரசியல் கரும்புள்ளி இரகசியங்கள்!!

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இலங்கை வரலாற்றில் மிகக் கொடூரமான சம்பவமாகக் குறிப்பிடப்படுகிறது. இதில் நூற்றுக்கணக்கான நிராயுதபாணி பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் நிரந்தரமாகக் காயமடைந்தனர்.

இந்தத் தாக்குதல் திட்டமிட்ட அரசியல் சதியாகவும், குறிப்பாக கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வர முயன்ற நடவடிக்கையாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.கோட்டாபயவுடன் தொடர்புடைய சில இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு வட்டார நபர்கள் இந்தச் சூழலை உருவாக்கச் செயல்பட்டதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக சுரேஷ் சலே கைது செய்யப்பட்டிருப்பது இந்த விசாரணையில் முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது.சஹ்ரான் மற்றும் தாக்குதல் குழுவிற்கு நிதி, ஆயுத ஆதரவு வழங்கப்பட்டதாகவும், இன - மத மோதல்களைத் தூண்டி அரசியல் பலன் பெற முயற்சி செய்யப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் உள்ளன.மேலும், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ஏமாற்றப்பட்டார்களா அல்லது தொடர்புடையவர்களா என்ற கேள்விகளும் எழுகின்றன. தாக்குதல் தொடப்பில் சம்பவத்துடன் தொடர்புடைய பல அம்சங்கள் குறித்து ஆழமான, சுயாதீன விசாரணை அவசியம் என வலியுறுத்தப்படுகிறது.அதன்படி, ஈஸ்டர் ஞாயிறு சதியின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் அம்பலப்படுத்த வேண்டும்.

இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பொடி லெசி!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரும், பல கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க மேலதிக விசாரணைகளுக்காக காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். 

இன்று காலை சந்தேக நபர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டதன் பின்னர், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியே அழைத்துச் செல்லப்பட்டு, மேலதிக விசாரணைகளுக்காக குறித்த பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டார். ரத்கம பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மனோஜ் மெண்டிஸின் கொலையுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், கடந்த 2016 ஆம் ஆண்டு 'பொடி லெசி' முதன் முதலில் கைது செய்யப்பட்டார். 

 அதனைத் தொடர்ந்து பல சந்தர்ப்பங்களில் மனிதக் கொலைகள், துப்பாக்கிகளை தம் வசம் வைத்திருந்தமை மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான இவர், குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் தடுப்புக்காவலிலும் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். 

கடந்த 2020 ஆம் ஆண்டு பூசா சிறைச்சாலையில் இருந்தபோது, சிறைச்சாலை அதிகாரிகள் குழுவொன்றுக்கும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஒருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பாக இவருக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

பலப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக 2018 ஆம் ஆண்டு இவருக்கு பிணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், கடந்த 2024 டிசம்பர் மாதம் வரை பிணை நிபந்தனைகளை நிறைவேற்றாததால் அவர் சிறையிலேயே இருந்தார். பின்னர், 2024 டிசம்பர் 9 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையான அவர், ஒரு இலட்சம் ரூபாய் பணப் பிணை மற்றும் தலா 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளைச் செலுத்திவிட்டு வெளியேறினார். 

 நீதிமன்றத்தினால் வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பிணை நிபந்தனைகளை மீறி அவர் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த குற்றச்சாட்டில் கடந்த 2025 ஜனவரி மாதம் மும்பையில் வைத்து அவர் கைது செய்யப்பட்டார். இவருக்கு சட்ட உதவி வழங்குவதற்காக இலங்கையிலிருந்து இரு சட்டத்தரணிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியா சென்றிருந்தனர்.

இந்திய பாதுகாப்புப் பிரிவினர் வழங்கிய தகவலின் அடிப்படையில், அவரை மீண்டும் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. 

இதற்காக நேற்று (26) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் இரு அதிகாரிகள் இந்தியா சென்றிருந்ததுடன், அவர்களது பொறுப்பில் ஒப்படைக்கப்பட்ட சந்தேக நபர் இன்று அதிகாலை நாட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.

சர்வதேச குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்!!

சர்வதேச சிவப்பு அறிவித்தல்கள் இன்றி இதுவரை 14 சந்தேக நபர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வுட்லர் தெரிவித்துள்ளார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியும் போதைப்பொருள் கடத்தல்காரருமான பொடி லெசி என்ற ஜனித் மதுசங்க டி சில்வாவை நாட்டிற்கு அழைத்து வந்தமை தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

 2024 ஆம் ஆண்டு முதல் இதுவரையான காலப்பகுதியில், சர்வதேச சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்டிருந்த 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்துள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக இதுவரை 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 

2026 ஆம் ஆண்டில் இவ்வாறான சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சிகள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். தற்போதுள்ள அரச பொறிமுறையின் ஊடாக 2024, 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுகளில் சிவப்பு அறிவித்தல் பிறப்பிக்கப்பட்ட 29 சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வர முடிந்தது.

அதேபோன்று, சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இன்றி, இன்று அழைத்து வரப்பட்ட சந்தேக நபருடன் மொத்தம் 14 பேரை நாட்டிற்கு கொண்டு வர முடிந்துள்ளது.

சர்வதேச பொலிஸ் சிவப்பு அறிவித்தல் இல்லாத நிலையில், அந்தந்த நாடுகளின் குடிவரவு குடியகல்வு குற்றங்கள் மற்றும் நாடுகடத்தல் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் நேரடி தலையீடு மற்றும் அந்த நாடுகள் அவர் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இந்த சந்தேக நபர்களை எம்மால் அழைத்து வர முடிந்தது. 

 மேலும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்காக 89 சிவப்பு அறிவித்தல்கள் பெறப்பட்டுள்ளன. 2026 ஆம் ஆண்டில் இந்த சந்தேக நபர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு அதிகபட்ச முயற்சி எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

வியாழன், 26 பிப்ரவரி, 2026

பகிஷ்கரிப்பில் குதிக்கும் மின்சார மற்றும் சுங்கத் தொழிற்சங்கங்கள்!!

எட்டு கோரிக்கைகளை முன்வைத்து இன்று (26) 06 மணிநேர அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தமது பிரச்சினைகள் குறித்து பலமுறை அதிகாரிகளுக்குத் தெளிவுபடுத்திய போதிலும், இதுவரை அதற்குத் தீர்வு கிடைக்கவில்லை என அந்த தொழிற்சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன. 


 அதன்படி, இன்று நண்பகல் 12.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நாடு தழுவிய ரீதியில் அடையாள வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் என இலங்கை மின்சார சபையின் தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்தார். 

 இதேவேளை, தமது கோரிக்கைகள் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சருடன் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் முடிவுகளின் அடிப்படையில், அடுத்தகட்ட தொழிற்சங்க நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என சுங்கத் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. 

 கடந்த செவ்வாய்க்கிழமை முதல் கறுப்புப் பட்டிகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் நடைமுறையில் உள்ளதாக சுங்க அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் கீதாஞ்சன மடபாத தெரிவித்துள்ளார்.

Thank You Google

Thank You Google
Thanks