வெள்ளி, 24 ஏப்ரல், 2026

ஈரான் மழையை திருடிய அமெரிக்கா!

ஈரான் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மிகப்பெரிய தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க முடியாமல் திணறியது ஈரான். இந்த நிலை தொடர்ந்தால் நாங்கள் Tehran -யை காலி செய்து கொண்டு வெளியேற வேண்டியது வரும் என்று அதிபர் Pezeshkian கூறியது உங்களுக்கு நினைவிருக்கலாம். 

ஆனால், இந்த 40 நாட்கள் போருக்கு பிறகு வாரத்தில் குறைந்தது 3 நாட்கள் தொடர்ந்து மழை பெய்வதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர் Tehran மக்கள்! குறிப்பாக நாடு முழுவதும் உள்ள 17 அணைக்கட்டுகளில் 07 அணைக்கட்டுகள் பல வருடங்களுக்கு பிறகு 99% நீர் கொள்ளளவை எட்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போருக்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்கலாம்! 

சில வருடங்களுக்கு முன்பு ஐ.நாவில்‌ எங்களின் மழையை அமெரிக்க கூட்டணி நாடுகள் திருடுகின்றன என்று குற்றச்சாட்டு வைத்தது ஈரான். அப்போது அதை யாரும் கண்டுகொள்ளவில்லை! ஆனால், இந்த போர் துவங்கிய 2 மணி நேரத்தில் உடனடியாக தெற்கு நாடுகளில் உள்ள அமெரிக்க இராணுவ தளங்கள் மற்றும் கண்காணிப்பு ரேடார் கருவிகளை குறி வைத்து தாக்குதல் நடத்தியது IRGC. 

அதில் முக்கியமாக ஈரான் குறி வைத்த அனைவரும் 1 பில்லியன் 2 பில்லியன் என விலை உயர்ந்த Radar மற்றும் Satellite Systems தான். இவற்றை 2006 -க்கு பிறகு தான் அமெரிக்கா பல அரபு நாடுகளில் பொருத்தியது! இந்த 2003 - 2023 இந்த 20 வருடங்களில் ஈரான் 67% மழையை இழந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

2017 மற்றும் 2018 மிகவும் வறட்சியான வருடம் ஈரானுக்கு! அந்த கால கட்டத்தில் தான் அமெரிக்க Sanctions அதிகரித்து ஈரான் மீது! நிற்க! இப்போது ஒரு சின்ன Flash Back: 2018 உலககோப்பை கால்பந்து போட்டியில் ரொனால்டோ அடித்து Penalty Kick -யை‌ ஈரான் Goal Keeper தடுத்து விட்டார். அன்றை தினத்தில் அது கால்பந்து உலகமே வியந்து பார்த்த நிகழ்வு! 

அந்த நேரத்தில் பேசிய இஸ்ரேல் பிரதமர் நேத்தன்யாகு.., ரொனால்டோ-வை தடுக்க முடிந்த உங்களால் தண்ணீர் பற்றாக்குறையை தடுக்க முடியவில்லை என்று ஈரானை கிண்டல் செய்ய.., ஒட்டுமொத்த ஈரான் மக்களும் பொங்கி எழுந்து நேத்தன்யாகு-வை வசை பாடினார்கள். அந்த அளவுக்கு உலக பிரசித்தி பெற்றது ஈரான் தண்ணீர் வறட்சி! 

ஈரான் பல குளிர் பிரதேசங்கள் மற்றும் மலைகள் நிறைந்த நாடு ஆனால் எப்படி தண்ணீர் வறட்சி என்ற கேள்வி எழுந்த போது தான்.., இந்த தண்ணீர் வறட்சி செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்று! என்று கூறினார்கள் ஈரான் வானிலை ஆராய்ச்சியாளர்கள். 

அரபு நாடுகளில் வைக்கப்பட்ட ரேடார் கருவிகள் வெறும் ஏவுகணை தடுப்பு மற்றும் வான் கண்காணிப்பு சாதனமாக இல்லாமல் Weather Manipulation செய்கிறது என்பதை அழுத்தமாக பதிவு செய்துள்ளது பல இடங்களில் ஈரான். இதெல்லாம் சாத்தியமா என்று உங்களுக்கு கேள்வி எழலாம்! 

 வெறும் முட்டை வடிவில் உள்ள Satellite Communication கருவியை 2 பில்லியன் டாலர் செலவு செய்து துபாயிலும் கத்தாரிலும் வைக்க அமெரிக்கர்கள் என்ன முட்டாள்களா? அல்லது அத்தனை செலவு ஏன் என்று இஸ்ரேல் லாபி தான் அமெரிக்காவை நோண்டி இருக்காதா?


 இது 100% Weather War Fare தான் என்பதை வரலாற்று தரவுகளுடன் நாம் அறிய முடியும்! Vietnam போரின் போது அமெரிக்கா தோல்வி அடைந்து கொண்டிருந்த பகுதியில் எல்லாம் அடுத்த சில வாரங்களில் 30% அதிக மழை பெய்தது! 10 வருடங்களுக்கு பிறகு அதற்கு காரணம் அமெரிக்கா மறைமுகமாக செய்த வானியல் முறைகேடு என High Confidential ஆவணங்கள் வெளி வந்தன. 

அதற்கு Weather Warfare என பெயர் வைத்திருந்தது அமெரிக்கா! அதன் பிறகு தான் வானிலையை போருக்கு ஆயுதமாக பயன்படுத்தக் கூடாது என்று ஐ.நா தடை கொண்டு வந்தது! 1970-களில் மழை பெய்ய வைக்க முடிந்த அமெரிக்காவால் 2005-ல் மழைய நிறுத்த முடியாது என்று யாராவது சொன்னால் நான் நம்ப தயாரில்லை! 

இவர்களின் Manipulation -யை ஈரான் அடித்து உடைத்ததும் ஈராக்கில் 10 வருடங்களில் இல்லாத அளவுக்கு மழை ஒரே வாரத்தில் 5° வெப்பநிலை குறைந்துள்ளது! ஓமனில் மூன்று வருடங்களில் இல்லாத அளவுக்கு தொடர்ந்து ஒரு வாரம் மழை!

 ஈரான் உலக மக்களுக்கான போரை நடத்திக் கொண்டு இருக்கிறது என்பதை காலம் நிரூபித்துக் கொண்டு இருக்கிறது! 

- முகவை முபாரக்.

பிரித்தானியாவின் இளவரசர் ஹாரி உக்ரைனிற்கு பயணம்!

பிரித்தானியாவின் இளவரசர் Prince Harry, உக்ரைனின் தலைநகர் Kyiv நகரத்திற்கு முன்னறிவிப்பு இன்றிய திடீர் பயணமாக சென்றுள்ளார் என பிரித்தானிய ஊடகங்களும் உக்ரைன் அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். ரஷ்யாவுடன் நடைபெற்று வரும் போர்நிலையின்போது, உக்ரைனுக்கு ஆதரவாக அவர் மேற்கொண்ட இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

 சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளிகளில், அவர் ரயிலில் இருந்து இறங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இது பாதுகாப்பு காரணங்களால் குறைந்த அளவிலான மற்றும் ரகசிய தன்மை கொண்ட பயணமாக இருந்ததை வெளிப்படுத்துகிறது. 

இந்த பயணம், Ukraine நாட்டிற்கு சர்வதேச ஆதரவு தொடர்ந்தும் நிலவுகின்றது என்பதற்கான ஒரு சின்னமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு அமைப்புகள், இந்த வருகையை உலகளாவிய அரசியல் மற்றும் பாதுகாப்பு அட்டவணையில் உக்ரைனின் நிலைப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு முயற்சியாக விளக்கியுள்ளன. 

முன்னதாகவும் இளவரசர் ஹாரி உக்ரைனுக்கு விஜயம் செய்து போரில் காயமடைந்த முன்னாள் படைவீரர்களை சந்தித்து அவர்களின் மீளுருவாக்கத்திற்கான ஆதரவை வெளிப்படுத்தி இருந்தார். 

இம்முறை, அவரது பயணம் பாதுகாப்பு, பாதுகாப்புத் திட்டங்கள் மற்றும் நீண்டகால ஆதரவு குறித்து உயர்மட்ட விவாதங்களையும் உள்ளடக்கியதாக இருக்கலாம் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன

பிள்ளையானை சிறையில் சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி !

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளில், பிள்ளையான் என்ற முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பேராசிரியர் ரொஹான் குணரத்ன ஆகியோர் குறித்து புதிய தகவல்கள் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.


 மட்டக்களப்பு சிறைச்சாலையில் பிள்ளையான் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, பேராசிரியர் ரொஹான் குணரத்ன அவரை 3 சந்தர்ப்பங்களில் நேரில் சந்தித்து பேசியுள்ளதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். 

 பிள்ளையானுடன் சிறையில் இருந்த ஒருவரின் சாட்சியத்தின் அடிப்படையில் இந்த தகவல் வெளியாகியுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த சந்திப்புகளின் போது பேராசிரியர் குணரத்னவுடன் இரு பெண்கள் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் பின்னர் நேரடியாக இலங்கை இராணுவத்தில் 'மேஜர் தரத்துக்கு நியமிக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சஹ்ரான் ஹாஷிமின் சகோதரர் செய்னி மௌலவி மற்றும் மில்ஹான் ஆகியோரை பிள்ளையான் தான் இருந்த சிறை அறைக்கே அழைத்துச் சென்றதாக அந்தச் சாட்சியாளர் தெரிவித்துள்ளார். 

 அவர்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்த போது எவராவது அருகில் சென்றால் பேச்சை மாற்றி விடுவார்கள் என்றும் சாட்சியாளரை கோடிட்டு, குற்றப்புலனாய்வுத்துறையினர் நீதிமன்றுக்கு அறிக்கையிட்டுள்ளனர்.

தமிழக வரலாறு படைத்த வாக்குப்பதிவு -85 சதவீதம்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக இந்த முறை 84. 41 சதவிகிதம் வாக்குகள் பதிவாக்கி உள்ளது. இது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த மாலை 6 மணி நிலவரம் வாக்குப்பதிவு ஆகும். 

ஆறு மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளில் குவிந்து டோக்கன்கள் பெற்ற வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அந்த வாக்குகள் இந்த கணக்கில் இன்னும் சேர்க்கப்படவில்லை. அந்த வாக்குகள் சேர்க்கப்பட்ட பிறகு தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 

இன்று அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன் பெற்றவர்களுக்கு வாக்களிக்க 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் மாலை 6 மணி நிலவரப்படி 83.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 89.20% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 74.46% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 வரலாறு படைத்த தமிழகம்: தமிழகத்தில் இதுவரை பதிவானதில் அதிக வாக்கு சதவீதம் என்றால் 2011-ல் 77.8 % வாக்குகள் பதிவானதுதான். 

அதற்கு முன்னதாக 1967-ல் 76.57% வாக்குகள் பதிவானதே அதிகபட்ச வாக்குப் பதிவு சாதனையாக இருந்தது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 மாவட்டங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்து கவனத்தை ஈர்த்துள்ளன. கரூர் ... 1957 முதல் இதுவரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதங்களின் விவரம்: 1957-ல் 47% வாக்குகள்

1962-ல் 71% வாக்குகள்

1967-ல் 76.57% வாக்குகள்

1971-ல் 71% வாக்குகள்

1977- ல் 61.58% வாக்குகள்

1980-ல் 61.58% வாக்குகள்

1984-ல் 73.47% வாக்குகள்

1989-ல் 69.69% வாக்குகள்

1991-ல் 63.92% வாக்குகள்

1996-ல் 66.95% வாக்குகள்

2001-ல் 59.07% வாக்குகள்

2006-ல் 70.22% வாக்குகள்

2011-ல் 77.8% வாக்குகள்

2016-ல் 74.26% வாக்குகள்

2021-ல் 71.28% வாக்குகள்

இன்று இரவு அல்லது நாளை காலை கூடுதல் வாக்குகள் கணக்கிடப்பட்டு ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்பட உள்ளது

அரபு லீக்கின் குற்றச்சாட்டுகளை ஈரான் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், ஈரான் தொடர்பாக அரபு லீக்கின் வெளியுறவு அமைச்சர்கள் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கங்களை நிராகரித்தார்.

மேலும், சில உறுப்பு நாடுகளின் ஒருதலைப்பட்சமான மற்றும் ஆக்கப்பூர்வமற்ற கருத்துக்களால் பாதிக்கப்படும் நிலைப்பாடுகளைத் தவிர்க்குமாறு அந்த லீக்கை அவர் வலியுறுத்தினார். வியாழக்கிழமை இரவு வெளியிட்ட ஓர் அறிக்கையில், அரபு லீக்கின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கையில் உள்ள குற்றச்சாட்டுகளை இஸ்மாயில் பாகாயி நிராகரித்தார். 

மேலும், அதன் சில உறுப்பினர்கள் கொண்டுள்ள ஒருதலைப்பட்சமான மற்றும் ஆக்கப்பூர்வமற்ற நிலைப்பாடுகளிலிருந்து சுதந்திரமாக, அந்த அமைப்பு தனது அணுகுமுறைகளை வடிவமைக்க வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார். 

படைபலத்தைப் பயன்படுத்துவதற்கான தடை மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சாசனத்தின் கொள்கைகளை ஈரான் கடைப்பிடிப்பதை அவர் வலியுறுத்தினார். 

இது தொடர்பாக, பாரசீக வளைகுடாவின் தெற்குக் கடற்கரையோரம் உள்ள சில நாடுகளில் நிலைநிறுத்தப்பட்டுள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மற்றும் வசதிகளுக்கு எதிரான ஈரானின் தற்காப்பு நடவடிக்கைகள், ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 51வது பிரிவின் கீழ் உள்ள உள்ளார்ந்த தற்காப்பு உரிமைக்கு இணங்கவும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய ஆட்சியின் இராணுவ ஆக்கிரமிப்புக்கு பதிலடியாகவும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர் கூறினார். 

தலையிடாமை மற்றும் பிற நாடுகளுக்கு எதிராகத் தங்கள் நிலப்பரப்பைப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற நாடுகளின் கடமை தொடர்பான சர்வதேச சட்டத்தின் நிறுவப்பட்ட கொள்கைகளைக் குறிப்பிட்டு, அணுகலை எளிதாக்குதல், தளங்களை வழங்குதல், அல்லது தளவாட அல்லது உளவுத்துறை ஆதரவு உள்ளிட்ட எந்த வடிவத்திலும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளுக்குத் தங்கள் நிலப்பரப்பையும் வசதிகளையும் வழங்கிய பிராந்திய அரசாங்கங்கள், அத்தகைய நடவடிக்கைகளின் விளைவுகளுக்கு சர்வதேசப் பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும், அவை பொறுப்புக்கூற வைக்கப்பட வேண்டும் என்றும் பாகாயி குறிப்பிட்டார். 

மேலும், ஈரானுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் நிராகரித்தார். மேற்கு ஆசியாவில் நிலவும் நாள்பட்ட நிலையற்ற தன்மை மற்றும் பாதுகாப்பின்மை ஆகியவை, பிராந்தியத்திற்கு அப்பாற்பட்ட சக்திகளின் இருப்பு மற்றும் இராணுவத் தலையீடுகள், அத்துடன் பாலஸ்தீனிய மக்களை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட ஆக்கிரமிப்பு மற்றும் காலனித்துவக் கொள்கைகளின் தொடர்ச்சி ஆகியவற்றின் விளைவாகும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த யதார்த்தத்தைப் புறக்கணிப்பது பிராந்தியப் பாதுகாப்பின்மையை நிலைநிறுத்தித் தீவிரப்படுத்தும் என்று அவர் எச்சரித்தார். பிராந்திய நாடுகளிடையே நம்பிக்கையையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவதில் ஈரானின் உறுதியை அந்தப் பேச்சாளர் மேலும் மீண்டும் வலியுறுத்தினார்.

மேலும், தங்கள் சட்ட மற்றும் அரசியல் பொறுப்புகளை அங்கீகரிக்கவும், பதற்றத்தை அதிகரிக்கும் சொல்லாடல்களைத் தவிர்க்கவும், பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் ஆக்கப்பூர்வமான ஈடுபாட்டைத் தொடரவும் அவர் அந்நாடுகளைக் கேட்டுக்கொண்டார்.

வியாழன், 23 ஏப்ரல், 2026

ஜலசந்தியை மீண்டும் திறப்பது சாத்தியமில்லை- ஈரான் !!

அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையின் ஒரு பகுதியாக வளைகுடாவில் ஈரான் கொடி ஏற்றப்பட்ட சரக்குக் கப்பலை இடைமறித்ததற்குப் பதிலடி கொடுப்பதாக சூளுரைத்த சில நாட்களுக்குப் பிறகு, ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியில் மூன்று கப்பல்களைத் தாக்கி, இரண்டைக் கைப்பற்றியுள்ளது. 

ஞாயிற்றுக்கிழமை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், 'டூஸ்கா' என்ற அந்தக் கப்பல், நிறுத்தும்படி விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளுக்குப் பதிலளிக்கத் தவறியதால் அமெரிக்கக் கடற்படையால் கைப்பற்றப்பட்டதாகக் கூறினார்.

இது போர்நிறுத்தத்தை மீறிய செயல் என்றும், இந்த "ஆயுதமேந்திய கடற்கொள்ளைச் செயலுக்கு" விரைவில் பதிலடி கொடுக்கப்படும் என்றும் ஈரான் கூறியுள்ளது. 

புதன்கிழமை, இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் கடற்படை, ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் நடமாட்டங்களைக் "கண்காணித்து வருவதாகவும்", "மீறுபவர்களுக்கு" எதிராக "கடுமையான" நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளது.

லண்டன் 24 மணி நேர சுரங்க ரயில் வேலைநிறுத்தம்!

 24 மணி நேர சுரங்க ரயில் வேலைநிறுத்தம் தொடங்கியதால், லண்டன் மேலும் இடையூறுகளைச் சந்திக்கிறது.வியாழக்கிழமை நண்பகல் முதல் இரண்டாவது 24 மணி நேர சுரங்க ரயில் வேலைநிறுத்தம் தொடங்குவதால், லண்டனில் பயணிப்பவர்கள் மேலும் இரண்டு நாட்களுக்கு இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும்.

லண்டன் சுரங்க ரயில் நான்கு நாள் வார வேலைத் திட்டத்திற்கு எதிராக, ஆர்எம்டி தொழிற்சங்க ஓட்டுநர்கள் வேலைநிறுத்தத்தைத் தொடர்கின்றனர். 

இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மேற்கொண்டு எந்தப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. மேலும், செவ்வாய்க்கிழமை நண்பகல் முதல் தொடங்கும் முதல் 24 மணி நேர வேலைநிறுத்தத்திற்குப் பிறகு, லண்டன் அண்டர்கிரவுண்டின் தன்னார்வ நான்கு நாள் வார வேலைத் திட்டத்திற்கு எதிராக RMT தொழிற்சங்கத்தின் ஓட்டுநர்கள் தங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்வார்கள். பெரும்பாலான சுரங்க ரயில் பாதைகளில் சேவைகள் குறைக்கப்பட்டன, ஆனால் ரத்து செய்யப்படவில்லை.

தலைநகரின் சுரங்க ரயில் ஓட்டுநர்களில் பாதிக்கும் மேற்பட்டோர், நான்கு நாள் வார வேலைத் திட்டத்தை வரவேற்றுள்ள Aslef தொழிற்சங்கத்தின் உறுப்பினர்களாக உள்ளனர், மேலும் அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவில்லை. லண்டனுக்கான போக்குவரத்து (TfL) ஒட்டுமொத்த இடையூறுகளைக் கட்டுப்படுத்த முயன்றதால், புதன்கிழமை காலை 7.30 மணி முதல் மட்டுமே சேவைகள் இயக்கப்பட்டன. 

இதனால், அதிகாலையில் பயணத்தைத் தொடங்குபவர்கள் மாற்றுப் போக்குவரத்தைத் தேட வேண்டியிருந்தது. கடந்த செப்டம்பரில் அனைத்து RMT தொழிலாளர்களும் நடத்திய வேலைநிறுத்தங்களின் போது இருந்ததை விட, பரவலான போக்குவரத்து நெரிசலும் இடையூறுகளும் மிகவும் குறைவாகவே காணப்பட்டன. தலைநகரில் உள்ள சில நிறுவனங்கள், அதிகமானோர் வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் வகையில் விதிகளைத் தளர்த்தியுள்ளன. 

மேலும், நல்ல வானிலை மக்களை மிதிவண்டி ஓட்ட அல்லது நடக்கத் தூண்டியுள்ளது. சேவைகள் சீராக இயங்கிய மற்றும் பயணிகள் சுரங்க ரயிலில் பயணிக்கத் துணியாத வழித்தடங்களில், வழக்கத்தை விட ரயில்கள் அமைதியாக இருந்ததாக சில பயணிகள் தெரிவித்தனர். 

இருப்பினும், பெரும்பாலானோர் நீண்ட காத்திருப்புகளையும் நெரிசலான ரயில்களையும் எதிர்கொண்டனர். செவ்வாய்க்கிழமை காலை சாண்டாண்டர் பைக் வாடகை 60% அதிகரித்துள்ளதாக TfL கூறியது. அதே நேரத்தில், லண்டனில் மின்-ஸ்கூட்டர் மற்றும் மின்-பைக் வாடகை நிறுவனங்களில் ஒன்றான Voi, கடந்த வாரத்தை விட பயணங்கள் 52% அதிகமாக இருந்ததாகவும், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் புதிய பயனர்கள் இணைந்ததாகவும் கூறியது. 

வியாழக்கிழமை அன்று பயணம் செய்வதற்கு முன் பயணிகள் தொடர்ந்து சரிபார்க்க வேண்டும் என்று TfL கூறியது. நண்பகல் முதல் அனைத்து வழித்தடங்களிலும் சேவைகள் குறைக்கப்பட்டு, இரவு 8 மணிக்குள் முடிவடையும். வெள்ளிக்கிழமை காலை 7.30 மணி முதல் முதல் ரயில்கள் இயக்கப்படும். பிக்காடிலி, வாட்டர்லூ & சிட்டி மற்றும் சர்க்கிள் வழித்தடங்களின் பெரும்பாலான பகுதிகளிலும், மெட்ரோபாலிட்டன் மற்றும் சென்ட்ரல் வழித்தடங்களின் சில பகுதிகளிலும் வேலைநிறுத்த நேரங்களில் சேவை இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. 

லண்டன் ஓவர்கிரவுண்ட், எலிசபெத் லைன் மற்றும் DLR உள்ளிட்ட பிற ரயில் சேவைகள் இயங்கும். இந்த வேலைநிறுத்த நடவடிக்கை குறித்து ஆஸ்லெஃப் மற்றும் டிஎஃப்எல் ஆச்சரியம் தெரிவித்திருந்தாலும், தங்களது ஓட்டுநர்களுக்கு சோர்வு குறித்த கவலைகள் இருப்பதாகவும், பேச்சுவார்த்தை நடத்தத் தவறியதற்காக டிஎஃப்எல் மீது குற்றம் சாட்டுவதாகவும் ஆர்எம்டி கூறியது.

நான்கு நாள் வேலை வாரத்திற்கான தங்களது முன்மொழிவுகள், லண்டன் அண்டர்கிரவுண்டை மற்ற ரயில் இயக்க நிறுவனங்களின் வேலை முறைகளுக்கு இணையாகக் கொண்டுவரும் என்றும், ஐந்து நாள் வேலை வார முறையைத் தொடர விரும்பும் ஓட்டுநர்கள் அவ்வாறே செய்ய முடியும் என்றும் டிஎஃப்எல் கூறியது.

 "திணிக்கப்பட்ட, போலியான நான்கு நாள் வாரத்திற்கு" தொழிற்சங்கம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும், "வேலை நேரத்தின் நீளம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் சோர்வு பாதுகாப்பைப் பாதிப்பது குறித்து எங்கள் உறுப்பினர்களிடமிருந்து கடுமையான கவலைகள்" எழுப்பப்பட்டுள்ளதாகவும் ஆர்எம்டி செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறினார்.

Thank You Google

Thank You Google
Thanks