திணைக்களத்தின் சிரேஷ்ட நீதிபதிகள் சிலர் இணைந்து தங்களின் தனிப்பட்ட வங்கி கணக்குகளில் வைப்பு செய்துள்ளமை தெரியவந்துள்ளதாக சர்வதேச ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி தமிழ்வின் இணையத்தளம் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது.
ஒரு புறம் தமிழினவழிப்பாளர்கள் பணத்தை திருட மற்றைய புறத்தில் தமிழீழத் தேசியச் சொத்துக்களை பராமரிப்பதற்காக புலம்பெயர் தேசத்தில் நியமிக்கப்பட்டவர்கள் 2009 இன் முடிவில் அத்தனைச் சொத்துக்களையும் தம்வயப்படுத்தி தமது தனிப்பட்ட குடும்பச் சொத்தாக்கியுள்ளார்கள்.
எமது தாயக விடுதலையின் ஒரு முக்கிய விடயமாக விளங்குகின்ற பொருளாதாரத்தை இவ்வாறான துரோகிகளும் இனவழிப்பாளர்களும் முடக்கி தமது சொத்தாக்கியதால் பின்வருவன முடக்கப்பட்டு எமது இனம் தம்மை அழிக்கும் சிங்கள அரசிடமே தங்கிவாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது;
(1)விதவைகள், மாற்றுத்திறனாளிகளிற்கான உதவிகள்,
(2)தேச கட்டுமானம், கல்வி, பொருளாதார வளர்ச்சி
(3)புலம்பெயர் தேசத்தில் விடுதலைக்கான வழிமுறைகள்
இவ்வாறான செயற்பாடுகள் பொருளாதார உதவிகள் இல்லாமல் முடக்கப்பட்டு ஈழத்தமிழ் இனம் பொருளாதார ரீதியில் ஊனமுற்ற நிலையில் உள்ளது.
இதில் முக்கிய விடயம் என்னவென்றால் ஒவ்வொரு புலம்பெயர் தேசியத்திலும் பல மில்லியன் டொலர் பெறுமதியான தேசிய சொத்துக்களை வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை வெறும் 30ஐ தாண்டாது.
ஆனால் இவர்களும் இவர்களது கையாட்களும் சொத்துப் பிரிக்கும் போட்டியில் மாறி மாறி சேறடித்து “தெரிந்தும் தெரியாமலும்” சிறிலங்காவின் தமிழீழ விடுதலைக்கு எதிரான பாரிய “கருத்துருவாக்கப் பிரச்சாரத்திற்கு” துணை போகிறார்கள்.
“தமிழீழ விடுதலையை வைத்தும் தாயாகத்தில் உள்ள தமிழர்களை வைத்தும் புலம்பெயர் தேசத்தில் “பலர்” சொத்துக்களை கையகப்படுத்தியுள்ளார்கள், ஆகவே தாயக மக்கள் புலம்பெயர் ஈழத்தமிழர்களை கைவிட்டுவிட்டு சிறிலங்காவுடன் சேர்ந்து பொருளாதார வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவேண்டும்” என்பதுதான் சிறிலங்காவின் அந்த கருத்துருவாக்கம்.
புலம்பெயர் மற்றும் தமிழீழத்தில் வாழும் ஈழத்தமிழர்கள் சிறிலங்காவின் பிரிச்சாரத்திற்குள் சிக்கிக்கொள்ளாமல், தமிழீழத்தில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்துவது எமது ஒவ்வொருவரின் கடமை மட்டுமல்ல, பொறுப்பும் கூட.
தேசியச் சொத்துக்கள் என்று சொல்லும் போது “அசையும், அசையாச் சொத்துக்கள்” மட்டுமல்ல, எமது விடுதலையை இலக்காகக் கொண்டு தமிழீழ மெய் நிகர் அரசால் (புலிகளால்) உருவாக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புகளும் அடங்கும்.
இந்த அமைப்புகளை ஒரு சிலர் கையகப்படுத்திக்கொண்டு தமது வருமானத்திற்காகவும் தாம் அந்த பதவிகளில் தொடர்ச்சியான அதிகாரத்தை கொண்டிருப்பதற்காகவும் “தமிழீழம்”, மற்றும் எமது அடையாள நீக்க/ அழிப்பு அரசியலை மேற்கொள்வதோடு, தமக்கு நெருக்கமானவர்களை புலம்பெயர் நாடுகளின் தேர்தலில் வெற்றி பெறவைப்பதற்காகவும் தேசியத்தால் தொடங்கப்பட்ட அமைப்புகளை கருவிகளாக பயன்படுத்துகிறார்கள்.
தேர்தலில் வென்ற பின்னர் இவர்கள் விடுதலைக்கு எதிராக திரும்பிவிடுவார்கள். ஒரு சில அமைப்புகள் ஒரு படி மேலே சென்று சிறிலங்காவில் தமது முதலீடுகளைப் போட்டு தமது வருவானப் பெருக்கத்திற்காக சிறிலங்காவின் இனவழிப்பை வெள்ளையடிப்பதுடன், நல்லிணக்கப் போர்வையில் எமது விடுதலையையும் சிதைக்கும் வேலையை மும்முரமாக ஈடுபடுகிறார்கள்.
"No society can surely be flourishing and happy, of which the far greater part of the members are poor and miserable." — Adam Smith
"சமூகத்தில் பெரும்பாலானோர் ஏழைகளாகவும் துயரமுற்றவர்களாகவும் இருக்கும் போது ஒரு சமூகம் நிச்சயமாக வளமாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்க முடியாது."
— ஆடம் ஸ்மித்


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக