வெள்ளி, 24 ஏப்ரல், 2026

தமிழக வரலாறு படைத்த வாக்குப்பதிவு -85 சதவீதம்!!

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு புதிய வரலாறு படைத்துள்ளது. சுதந்திரத்திற்குப் பிறகு நடைபெற்ற தேர்தல்களில் முதல்முறையாக இந்த முறை 84. 41 சதவிகிதம் வாக்குகள் பதிவாக்கி உள்ளது. இது தேர்தல் ஆணையம் நிர்ணயித்த மாலை 6 மணி நிலவரம் வாக்குப்பதிவு ஆகும். 

ஆறு மணிக்கு பிறகு வாக்குச்சாவடிகளில் குவிந்து டோக்கன்கள் பெற்ற வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்து வந்தனர். அந்த வாக்குகள் இந்த கணக்கில் இன்னும் சேர்க்கப்படவில்லை. அந்த வாக்குகள் சேர்க்கப்பட்ட பிறகு தமிழக வாக்குப்பதிவு சதவிகிதம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிகிறது. 

இன்று அமைதியான முறையில் நடந்த 2026 தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில், மாலை 6 மணி நிலவரப்படி 84.41% சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. அதிகபட்சமாக கரூரில் 91.97% வாக்குகள் பதிவாகியுள்ளன. குறைந்தபட்சமாக கன்னியாகுமரியில் 75.48% வாக்குகள் பதிவாகியுள்ளன. 6 மணிக்குப் பின் டோக்கன் பெற்றவர்களுக்கு வாக்களிக்க 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 

தலைநகர் சென்னையில் மாலை 6 மணி நிலவரப்படி 83.18% வாக்குகள் பதிவாகியுள்ளன. இவற்றில் தொகுதி வாரியாகப் பார்த்தால் சென்னை டாக்டர் ராதாகிருஷ்ணன் நகரில் அதிகபட்சமாக 89.20% வாக்குகளும், குறைந்தபட்சமாக மயிலாப்பூரில் 74.46% வாக்குகளும் பதிவாகியுள்ளன.

 வரலாறு படைத்த தமிழகம்: தமிழகத்தில் இதுவரை பதிவானதில் அதிக வாக்கு சதவீதம் என்றால் 2011-ல் 77.8 % வாக்குகள் பதிவானதுதான். 

அதற்கு முன்னதாக 1967-ல் 76.57% வாக்குகள் பதிவானதே அதிகபட்ச வாக்குப் பதிவு சாதனையாக இருந்தது.தமிழக சட்டமன்றத் தேர்தலில் 5 மாவட்டங்கள் 90 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பதிவு செய்து கவனத்தை ஈர்த்துள்ளன. கரூர் ... 1957 முதல் இதுவரை தமிழக சட்டப்பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குப் பதிவு சதவீதங்களின் விவரம்: 1957-ல் 47% வாக்குகள்

1962-ல் 71% வாக்குகள்

1967-ல் 76.57% வாக்குகள்

1971-ல் 71% வாக்குகள்

1977- ல் 61.58% வாக்குகள்

1980-ல் 61.58% வாக்குகள்

1984-ல் 73.47% வாக்குகள்

1989-ல் 69.69% வாக்குகள்

1991-ல் 63.92% வாக்குகள்

1996-ல் 66.95% வாக்குகள்

2001-ல் 59.07% வாக்குகள்

2006-ல் 70.22% வாக்குகள்

2011-ல் 77.8% வாக்குகள்

2016-ல் 74.26% வாக்குகள்

2021-ல் 71.28% வாக்குகள்

இன்று இரவு அல்லது நாளை காலை கூடுதல் வாக்குகள் கணக்கிடப்பட்டு ஒட்டுமொத்த வாக்குப்பதிவு சதவிகிதம் அறிவிக்கப்பட உள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks