குர்திஸ்தானின் தேசபக்தி ஒன்றியக் கட்சியின் அரசியல் செயற்குழு உறுப்பினரான அமிடி, போட்டியாளரான குர்திஸ்தான் ஜனநாயகக் கட்சியின் தேர்வான ஈராக்கின் தற்போதைய வெளியுறவு அமைச்சர் புவாட் ஹுசைன் உள்ளிட்டோர் போட்டியிட்டனர்.
வழக்கப்படி, ஈராக்கின் அதிபர் எப்போதும் குர்து இனத்தைச் சேர்ந்தவராகவும், அதிக அதிகாரம் வாய்ந்த பிரதமர் ஷியா பிரிவை சேர்ந்தவராகவும், நாடாளுமன்ற சபாநாயகர் சன்னி பிரிவை சேர்ந்தவராகவும் இருப்பார்கள்.
புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் முதல் அமர்வு தொடங்கி 30 நாட்களுக்குள் அதிபர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற அரசியலமைப்பு காலக்கெடுவைக் கடந்து இரண்டு மாதங்களுக்கும் மேலாக அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
முதல் சுற்று வாக்கெடுப்பில் எந்த வேட்பாளரும் தேவையான மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையைப் பெறவில்லை. இருப்பினும், மற்ற 15 வேட்பாளர்களை விட அமிடி முன்னணியில் இருந்தார்.
அவர் முதல் சுற்றில் 208 வாக்குகளைப் பெற்றார்.
அதே நேரத்தில், இரண்டாவது வேட்பாளரான குர்திஸ்தான் இஸ்லாமிய ஒன்றியக் கூட்டணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் முத்தன்னா அமின் நாடர் 17 வாக்குகளைப் பெற்றார்.
இதன் விளைவாக, நாடாளுமன்றம் இரண்டாம் சுற்றுக்குச் சென்றது. இரண்டாம் சுற்றில் அமிடி 227 வாக்குகளையும், அமின் நாடர் 15 வாக்குகளையும் பெற்றனர்.
அடுத்த 15 நாட்களுக்குள் புதிய பிரதமரை புதிய அதிபர் நிசார் அமிடி தேர்வு செய்வார். இதில் ஈராக்கின் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிகி முன்னணியில் உள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக