எனினும், இந்த அறிக்கையை நிராகரித்துள்ள ஈரான் ஆயுதப் படைகளின் தலைமையகம், எந்தவொரு கப்பலும் அந்தப் பகுதியைக் கடப்பதற்கான அனுமதியை வழங்கும் அதிகாரம் ஈரானிய இஸ்லாமிய குடியரசின் ஆயுதப் படைகளுக்கே உள்ளது எனத் தெரிவித்துள்ளது.
மேலும், குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சிவில் கப்பல்கள் மட்டுமே நீரிணை வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுவதாக ஈரான் கூறியுள்ளது. அத்துடன், ஹோர்முஸ் நீரிணையை சட்டவிரோதமாகக் கடக்க முயற்சிக்கும் எந்தவொரு கப்பலுக்கும் எதிராகக் கடுமையான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஈரான் எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் சார்பில் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.
பேச்சுவார்த்தையின்போது அமெரிக்கா சமர்ப்பித்த நிபந்தனைகளை ஈரான் 'ஏற்க விரும்பவில்லை எனவும் ஈரானின் இந்த நிலைப்பாடு, அமெரிக்காவை விட ஈரானுக்குத்தான் அதிக பாதகமான செய்தியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 21 மணிநேரத்தில் டொனால்ட் ட்ரம்புடன் சுமார் 10 முறைக்கும் மேலாகத் தொடர்புகொண்டு ஆலோசனைகளைப் பெற்றதாக ஜே.டி. வேன்ஸ் தெரிவித்தார்.
ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சி செய்யாது என்பதற்கான "உறுதியான வாக்குறுதியை" அமெரிக்கா எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட கால அடிப்படையில் அணு ஆயுதக் கனவை ஈரான் கைவிட வேண்டும் என்பதே ட்ரம்பின் முக்கிய இலக்காகும். "நாங்கள் மிகவும் நெகிழ்வாகவும், அனுசரித்தும் நடந்துகொண்டோம். ஆனால் எங்கள் நிபந்தனைகளை ஏற்க ஈரான் தயாராக இல்லை என வேன்ஸ் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக