சனி, 18 ஏப்ரல், 2026

மிகிந்தல பிள்ளைகளைக் காப்பாற்றச் சென்ற தந்தை நீரில் மூழ்கிப் பலி

மிகிந்தலை, மருதன்குளம குளத்தில் நீராடச் சென்ற இரு சிறுவர்களைக் காப்பாற்றச் சென்ற தந்தை ஒருவர், நீரில் மூழ்கி நேற்று (17) மதியம் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் மருதன்குளம பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


 உயிரிழந்தவர் தனது நண்பர் ஒருவருடன் குளத்திற்குச் சென்றிருந்த போது, அங்கு நீராடிக்கொண்டிருந்த தனது மகன் மற்றும் மற்றொரு சிறுவன் நீரில் மூழ்குவதைக் கண்டுள்ளார். 

 அவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர் குளத்தில் குதித்த போது, எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 இருப்பினும், 11 மற்றும் 12 வயதுடைய அந்த இரு சிறுவர்களும் எவ்வித ஆபத்துமின்றி காப்பாற்றப்பட்டுள்ளனர். சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், மிகிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks