சனி, 18 ஏப்ரல், 2026

தெதுரு ஓயாவில் மூழ்கி மொத்தமாக 8 பேர் உயிரிழப்பு

தெதுறு ஓயாவில் மூழ்கி காணாமல் போயிருந்த ஏனைய இருவரினதும் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கமைய, விபத்தில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. 

 (17) காலை காணாமல் போயிருந்த நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், ஏனைய இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன. 

தற்போது அந்த இருவரினதும் சடலங்களும் மீட்கப்பட்டுள்ளன. கடவத்தை பகுதியைச் சேர்ந்த 7 பேர் கொண்ட குழுவினர் கொபெய்கனே பகுதியில் உள்ள தமது உறவினர் வீட்டிற்குச் சென்றுள்ளனர். 

பின்னர் அந்த வீட்டைச் சேர்ந்தவர்களுடன் இணைந்து 15 பேர் கொண்ட குழுவாக தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற போதே இந்தச் சோகமான சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks