வியாழன், 23 ஏப்ரல், 2026

ஜெர்மனியின் எண்ணெய் குழாயை ஒன்பது நாட்களுக்குள் மூடத் திட்டம் !!

விளாடிமிர் புடின் ஐரோப்பாவின் ஆற்றல் வழங்கலை மேலும் கட்டுப்படுத்தும் முயற்சியில் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளார். ரஷ்யா, ஜெர்மனிக்குள் செல்லும் முக்கியமான துருஷ்பா எண்ணெய் குழாயை ஒன்பது நாட்களுக்குள் மூடத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது. 

இதனால், கசகஸ்தானிலிருந்து வரும் எண்ணெய் வழங்கல் ஐரோப்பாவுக்கு பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது. இத்திட்டமிட்ட மூடல் குறிப்பாக ஜெர்மனிக்கு பெரிய சவாலாக இருக்கிறது. அங்கு உள்ள PCK ரிஃபைனரி (PCK refinery) செயல்படுத்தும் மொத்த மூல எண்ணெயில் சுமார் 17% இந்த குழாயின் மூலம் கிடைக்கிறது. 

 மேலும், அந்த ரிஃபைனரி போ்லின் நகரில் பயன்படுத்தப்படும் எரிபொருளில் சுமார் 90% வழங்குகிறது. எனவே, இந்த நடவடிக்கை ஜெர்மனியின் எரிபொருள் விநியோகத்திலும், போக்குவரத்து துறையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதனுடன், ஈரான் போரால் ஏற்பட்டுள்ள உலகளாவிய வழங்கல் சிக்கல்களும் ஐரோப்பாவின் ஆற்றல் நெருக்கடியை மேலும் தீவிரப்படுத்தும் நிலை உருவாகியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks