இரு நாட்டு வெளிவிவகார அமைச்சர்களிடையே தொலைபேசி ஊடாக நடந்த உரையாடலின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டதாக இலங்கையிலுள்ள ஈரான் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஈரான் தூதரகம் மேலும் தெரிவித்ததாவது, இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, 'IRIS Dena' கப்பலில் இருந்த மாலுமிகளை மீட்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், அக்கப்பலின் பணியாளர்கள் மற்றும் ஏனைய ஈரான் கடற்படை அதிகாரிகளின் உடல்களை ஈரானுக்குத் திருப்பி அனுப்புவதற்கு வழங்கிய ஒத்துழைப்பிற்காகவும் ஈரான் வெளிவிவகார அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார்.
ஈரான் வெளிவிவகார அமைச்சர், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஈரானுக்கு எதிராக இழைத்ததாகக் கூறப்படும் குற்றங்களைச் சுட்டிக்காட்டியதுடன், 'IRIS Dena' கப்பல் மீதான தாக்குதலானது அமெரிக்காவினால் மேற்கொள்ளப்பட்ட "முன்னெப்போதும் இல்லாத போர்க்குற்றம்" என்றும் இதன்போது குறிப்பிட்டார்.இது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அடிப்படை விதிகள் மற்றும் 1949 ஜெனிவா உடன்படிக்கைகளை கடுமையாக மீறும் செயலாகும் என்றும், இந்தக் குற்றத்தை ஈரான் ஒருபோதும் மறக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும், இதற்குப் பொறுப்பான குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு அனைத்து சட்ட மற்றும் அரசியல் வழிமுறைகளையும் ஈரான் பயன்படுத்தும் என்றும் அப்பாஸ் அரக்சி இதன்போது சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அமைச்சர்களான அரக்சி மற்றும் விஜித ஹேரத் ஆகியோர் இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய முன்னேற்றங்கள் குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.” என தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக