ஞாயிறு, 29 மார்ச், 2026

அமெரிக்கா - இஸ்ரேல் ஈரானில் அணுமின் நிலைய இலக்கு -ரஷ்யா எதிர்வினை

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரானில் முக்கிய அணுமின் நிலையங்களை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களை ரஷ்யா கடுமையாக கண்டித்துள்ளது.


 ரஷ்ய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா வெளியிட்ட அறிக்கையில், “இந்த தாக்குதல்கள் சர்வதேச சமுதாயத்தால் தெளிவாகவும் உறுதியாகவும் கண்டிக்கப்பட வேண்டும்.சர்வதேச சட்டத்தின் கடுமையான மீறல்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கு பொறுப்பானவர்கள் அதன் விளைவுகளை உணர வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்தோடு, பன்னாட்டு அணுசக்தி முகமையகம் (IAEA), இந்த நிலைமையின் தீவிரத்தைக் குறித்து தெளிவான நிலைப்பாடு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜகரோவா வலியுறுத்தியுள்ளார்.

 குறிப்பாக, இத்தாக்குதல்கள் மூலம் உருவாகும் அபாயங்களை சில நாடுகள் புறக்கணித்து வருகின்றன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எனவே IAEA பணிப்பாளர் ரஃபேல் க்ரோஸி, ஈரான் அதிகாரிகளிடமிருந்து நிலைமை குறித்த தகவல்களை பெற்ற பின்னர், இந்தத் தாக்குதல்களை நிறுத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவார் என எதிர்பார்ப்பதாக ரஷ்ய செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

மேலும், இந்தத் தாக்குதல்கள், அணு ஆயுத பரவலைத் தடுக்க உருவாக்கப்பட்ட Nuclear Non-Proliferation Treaty (NPT), IAEA கண்காணிப்பு முறைகள் மற்றும் அணு பாதுகாப்பு ஒப்பந்தங்களை பாதிக்கக்கூடியவை என்றும் ரஷ்யா எச்சரித்துள்ளது. 

 இந்தச் சம்பவங்கள், மத்திய கிழக்கில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்து, சர்வதேச பாதுகாப்பு குறித்து கவலைகளை எழுப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks