சனி, 28 மார்ச், 2026

யாழில் மணல் கடத்தல் பொலிஸ் பலி.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் மோதியதில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொடிகாமம் பகுதியில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் குழுவினர், மணல் ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை மறிக்க முயன்றுள்ளனர். 




இதன்போது, உழவு இயந்திரத்தைச் செலுத்தி வந்தவர் அதன் வேகத்தை அதிகரித்து பொலிஸ் குழுவினர் மீது மோதிவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார். இந்தக் கொடூர மோதலில் படுகாயமடைந்த அதிகாரி அல்பிறெட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் இருந்த மற்றொரு பொலிஸ் உத்தியோகத்தர் படுகாயங்களுடன் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உயிரிழந்த பொலிஸ் அதிகாரியின் சடலம் சாவகச்சேரி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டுத் தப்பிச் சென்ற சாரதியைக் கைது செய்ய விசேட பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டுத் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மோதிய வேகத்தில் உழவு இயந்திரத்தை விட்டுவிட்டு சாரதி தப்பியோடியுள்ளார். தற்போது கொடிகாமம் பொலிஸார் கொலையாளியைப் பிடிக்க வலைவீசித் தேடி வருகின்றனர். மணல் மாபியாக்களின் இந்தத் துணிகரச் செயல் யாழ். மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks