மஹான் ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான குறித்த விமானம், மனிதாபிமானப் பணியின் ஒரு பகுதியாக புது டில்லிக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.மஷ்ஹத் விமான நிலையத்தில் நேற்றையதினம்(30) திங்கட்கிழமை அமெரிக்கா நடத்திய தாக்குதலின் போது விமானம் சேதமடைந்ததாக தெஹ்ரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான மருத்துவப் பொருட்கள் மற்றும் நிவாரணப் பொருட்களைச் சேகரிப்பதற்காக இந்த வாரம் புது டில்லிக்கு அந்த விமானம் செல்லவிருந்ததாகக் தெரியவருகிறது.இருப்பினும், கூறப்படும் இந்தத் தாக்குதல் குறித்து அமெரிக்காவிடமிருந்து உடனடியாக எந்த உறுதிப்படுத்தலும் வரவில்லை என கூறப்படுகிறது.
மஹான் ஏர் என்பது மேற்கு ஆசியா, மத்திய ஆசியா, தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல பிராந்தியங்களில் விமானங்களை இயக்கும் ஒரு தனியார் ஈரானிய விமான நிறுவனமாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக