எதிர்பாராத தொழில்நுட்ப சூழ்நிலைகள் காரணமாக இந்த இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முன்னுரிமை அடிப்படையில் இது குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும் லண்டனில் உள்ள உயர் ஸ்தானிகராலயத்தின் தூதரகப் பிரிவுதெரிவித்துள்ளது.
ETA ஒப்புதல் அறிவிப்பைப் பெறாவிட்டாலும், ஏற்கனவே ETA க்கு விண்ணப்பித்த பயணிகள் இலங்கைக்கான தங்கள் பயணத்தைத் தொடரலாம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ETA அங்கீகார நகலை சமர்ப்பிக்காமல் பயணிகள் விமானத்தில் ஏற அனுமதிக்க விமான சேவைகள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இலங்கையில் உள்ள பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததும் ETA சரிபார்ப்பு மற்றும் தேவையான வசதிகள் வழங்கப்படும் என்று என அறிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண சேவைகளை விரைவில் மீண்டும் நிலைநிறுத்துவதற்காக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், ஏற்பட்டுள்ள அசௌகரியத்திற்கு வருந்தப்படுவதாகவும் அறிவிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக