யாழ். மத்திய பேருந்து நிலைய சூழலில் உள்ள பழக்கடைகளை அகற்றுவது தொடர்பாக உறுப்பினர் ப. தர்சானந்த் கொண்டுவந்த பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்று காலை மாநகர சபை முன்பாக வியாபாரிகள் போராட்டம் நடத்தினர்.
சபை அமர்வின் போது ஈ.பி.டி.பி உறுப்பினர்கள், “வியாபாரிகளுக்கு உரிய மாற்று இடவசதி அல்லது முறையான பொறிமுறையை வழங்காமல் அவர்களை அகற்றுவது வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்” என வாதிட்டனர்.
இந்தப் பிரேரணையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். ஆனால், மாநகர முதல்வர் இந்த விவகாரத்தை அலட்சியமாகத் தட்டிக்கழித்ததுடன், நிகழ்ச்சி நிரலின்படி சபையைத் தொடர முயன்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக