குளவிகள் கொட்டியதில் பாதிப்படைந்தோர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அதில் கடுமையான தாக்குதலுக்குள்ளாகியிருந்த முல்லைத்தீவு துணுக்காய் கல்வி வலயத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக பணியாற்றும் யாழ் ஆனைக்கோட்டையை சேர்ந்த அண்டனி ஜோர்ஜ் (53 வயது) அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குளவிக்கொட்டுத் தாக்குதலுக்குள்ளான 5 பாடசாலை மாணவர்கள் தொடர்ந்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இலங்கை கல்வி நிருவாக சேவை (SLEAS) தரம் || அதிகாரியான இவர் தனது மகனை பாடசாலையிலிருந்து அழைத்துவரும் நிலையிலேயே குறித்த அனர்த்தத்தை எதிர்கொண்டுள்ளார்.
முல்லைத்தீவு மாங்குளத்தில் குளவித் தாக்குதலுக்கு யாழப்பாணத்தைச் சேர்ந்த பிரதிக்கல்விப் பணிப்பாளர் ஜோர்ஜ் பலி!! வாழ்க்கையில் இப்படியும் படித்து முன்னுக்கு வரமுடியும் என்பதனை தற்காலத்தில் நிருபித்தவர் நீங்கள் உங்களைப்பற்றி பல தடவைகள் முகநூலில் எழுதுவதற்கு நினைத்தேன் ஆனால் கண்ணீர் அஞ்சலி பதிவு எழுத இறைவன் வைத்துவிட்டார்.
G.C.C (O/L) படித்துவிட்டு உயர்தரம் படிக்காமல் ஈழ நீதிமன்றில் அலுவலக உதவியாளராக கடமையாற்றினார்
அங்கு சட்டத்தரணிகளை பார்த்து தானும் ஒருநாள் சட்டத்தரணியாக ஆசைப்பட்டு திருமணத்தின் பின்னர் G.C.E(A/L) தனிப்பட்ட முறையில் எழுதி சித்தியடைந்து .
2005 ஆண்டு ஆசிரியராக நியமனம் பெற்று வெளிவாரி பட்டம் , பட்டப்பின் டிப்ளோமா, Med சட்டத்தரணியாக உமது கனவை அடைந்தீர்கள் .
2017 இல் இலங்கை கல்விநிர்வாக சேவைக்கு ஆரம்பக்கல்வி தெரிவானீர்கள் முல்லைத்தீவு, வரமராட்சி கல்வி வலயங்களில் உதவிக்கல்விப்பணிப்பாளராக சிறந்த சேவையாற்றினீர்கள் .
2025 இலிருந்து துணுக்காய் கல்விவலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளராக சிறப்பா சேவையாற்றிக்கொண்டிருக்கும் போது.
இறைவன் அடியில் இளைப்பாற கண்ணீர் அஞ்சலிகளை செலுத்துகின்றோம்.
உற்றார் உறவினர் நண்பர்கள்!!



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக