வியாழன், 22 ஜனவரி, 2026

உயர் நீதிமன்றத்தில் எம்.பி.க்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம்!!

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலத்திற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றொரு மனுவின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாக சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன இன்று (22) பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 121(1) உறுப்புரைக்கு அமைய இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்வதற்கான சட்டமூலம், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் கலாநிதி ஹர்ஷன நாணயக்காரவினால் கடந்த 7 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

 குறித்த சட்டமூலத்திற்கு எதிராக மனுக்களை தாக்கல் செய்வதற்கு அன்றிலிருந்து 14 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை நீக்கும் சட்டமூலம் மீதான இரண்டாவது வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடைபெறவுள்ளது. இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் 512 முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் ரத்து செய்யப்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks