வியாழன், 22 ஜனவரி, 2026

மாத்தளை போலியான இலக்கத் தகடு 10 மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் கைது!!

மாத்தளை நகரின் சங்கமித்த பிரதேசத்தில், உயர் என்ஜின் கொள்ளளவு கொண்ட மோட்டார் சைக்கிள்களைப் பயன்படுத்தி பந்தயத்தில் ஈடுபட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன், அதனை ஓட்டிச் சென்ற நபர்களும் மாத்தளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 


குறித்த மோட்டார் சைக்கிள்களில், போலியான இலக்கத்போலியான இலக்கத் தகடகளைப் பயன்படுத்தி ஓட்டிச் செல்லப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும் அடங்குவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

 கைது செய்யப்பட்டவர்கள் 18 முதல் 23 வயதுக்கு இடைப்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் கூறுகின்றனர். இதேவேளை, சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி, 'ஐஸ்' போதைப்பொருளைப் பயன்படுத்தியவாறு கொழும்பு - மாத்தளை பேருந்து ஒன்றினை செலுத்திய சாரதி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks