செவ்வாய், 6 ஜனவரி, 2026

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் ஐகோர்ட்!!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்பு தமிழர்களின் உணர்வுக்கு எதிரானது. 

இல்லாத ஒரு வழக்கத்தை மாற்றுவது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது. சட்டத்துக்கு முரணாக வழங்கிய தீர்ப்பை ஏற்க முடியாது. மலை உச்சியில் தீபம் ஏற்றியதற்கான ஆதாரம் இல்லை. இதில் ஒரு சாரார் புகுந்து விளையாடப் பார்க்கிறார்கள். 

இல்லாத ஒரு பழக்கத்தை புகுத்தாதீர்கள். எதற்காக இப்படி ஒரு தீர்ப்பை கொடுத்து தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டும்?. தமிழ்நாட்டில் எப்படியாவது மதக் கலவரத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிடுகிறது."இவ்வாறு தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks