எந்தவிதமான ஆயுதமும் இன்றி தனியாக நின்றிருந்த பெண்ணை நோக்கி, நவீன ஆயுதங்களுடன் கூடிய ஒரு பெரும் படைப்பிரிவு தாக்குதல் நடத்தியுள்ளது.
ஒரு தனி நபரை எதிர்கொள்ள இவ்வளவு பெரிய ராணுவப் படைப்பிரிவு பயன்படுத்தப்பட்டது ஏன்? இது அதிகார துஷ்பிரயோகமா அல்லது திட்டமிடப்பட்ட வன்முறையா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
சமூக வலைதளங்களில் இந்தச் சம்பவம் தொடர்பான காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வரும் நிலையில், மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
ஜனநாயகத்தின் காவலனாகக் கருதப்படும் ஒரு நாட்டில், ஒரு பெண்ணுக்கு எதிராக இத்தகைய வன்முறை நிகழ்த்தப்பட்டது .
சட்ட ஒழுங்கு மற்றும் மனித நேயத்தின் மீதான நம்பிக்கையை கேள்விக்குறியாக்கியுள்ளது.ஒரு முக்கியமான கூட்டாட்சி நடவடிக்கை (Federal Operation) நடைபெறும்போது, அதில் குறுக்கீடு செய்வது என்பது விளையாட்டல்ல. அது பாதுகாப்பிற்கும் சட்ட ஒழுங்கிற்கும் விடுக்கப்படும் சவால் என மாறுபட்ட கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
ஒரு அதிகாரி தனது கடமையைச் செய்யும்போது அவரைத் தடுப்பது முறையல்ல. அத்தகைய சூழலில் ஒருவரை அங்கிருந்து அகற்றுவது என்பது “வன்முறை” அல்ல; அது பணியை தடையின்றி முடிப்பதற்கான “அவசியம்” என்ற விவாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒரு தேடுதல் வேட்டையோ அல்லது கைது நடவடிக்கையோ நடக்கும்போது, அங்கே விவாதிக்கவோ அல்லது விளக்கம் அளிக்கவோ நேரமிருக்காது. அதிகாரிகளின் முதல் முன்னுரிமை இலக்கை அடைவதே.
பணி என்று வந்துவிட்டால், குறிப்பாக அது கூட்டாட்சி தொடர்பானதாக இருந்தால், அங்கே தயக்கம் என்பது தோல்விக்கு வழிவகுக்கும்.
சட்டம் தன் கடமையைச் செய்ய ஒத்துழைப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பு. தேவையற்ற குறுக்கீடுகள் தேவையற்ற விளைவுகளையே ஏற்படுத்தும் என இந்த நடவடிக்கையை ஆதரிக்கும் தரப்பினர் வாதிடுகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக