வியாழன், 8 ஜனவரி, 2026

சுன்னாகம் கந்தரோடை விகாரை” பெயர்ப் பலகை அகற்றப்பட்டது!!

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கந்தரோடை பகுதியை ஒரு மத வழிபாட்டு இடமாக மட்டும் அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக, அதன் தொன்மையை விளக்கும் வகையில் “தொல்லியல் ஆய்வு மையம்” என அடையாளப்படுத்த வலிகாமம் தெற்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. சுன்னாகம் சந்தைக்கு அருகில் தனியார் காப்புறுதி நிறுவனத்தால் வைக்கப்பட்டிருந்த “கந்தரோடை விகாரை” என்ற திசைகாட்டிப் பலகை பிரதேச சபையினால் அகற்றப்பட்டுள்ளது. 

 குறித்த பகுதியை ஒரு குறிப்பிட்ட மதத்திற்குரிய இடமாக மட்டும் பார்க்காமல், அனைத்து மக்களுக்கும் பொதுவான ஒரு புராதன இடமாக “கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்” என அழைக்கப்பட வேண்டும் என அண்மையில் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சுன்னாகம் பகுதியில் உள்ள சந்தைக் கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்குரியது என்பதை உறுதிப்படுத்தும் வகையில், அதன் சிறப்புகளை விளக்கும் மும்மொழி கல்வெட்டு ஒன்றும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

தமிழ் மக்களின் பூர்வீக வரலாற்றுச் சின்னங்கள் சிதைக்கப்படுவதைத் தடுத்து, அவற்றின் உண்மையான தொன்மையை உலகிற்கு எடுத்துரைப்பதே இந்த நடவடிக்கையின் நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கந்தரோடை பகுதியில் காணப்படும் அரைவட்ட வடிவ கட்டுமானங்கள் (Miniature Stupas) இலங்கையின் ஆரம்பகால நாகரிகத்தின் சான்றுகளாகக் கருதப்படுகின்றன. இவை பௌத்த மதத்தோடு தொடர்புடையவை எனக் கூறப்பட்டாலும், 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks