ஞாயிறு, 18 ஜனவரி, 2026

அமெரிக்காவின் டெக்சாஸில் மாபெரும் எரிசக்தி வேட்டை!!

எரிசக்தி உலகில் ஒரு மிகப்பெரிய திருப்பம்! அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு அதிகப்படியான கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு இருப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளன.


 சுமார் 1.6 பில்லியன் பேரல்கள் (1.6 Billion Barrels). கச்சா எண்ணெய்: 28 டிரில்லியன் கன அடிக்கும் அதிகமான இயற்கை எரிவாயு: இருப்பு (28+ Trillion Cubic Feet). என்பவற்றை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS). கண்டறிந்துள்ளது. 

இவை டெக்சாஸின் பெர்மியன் பேசின் (Permian Basin) பகுதியில் உள்ள உட்ஃபோர்ட் மற்றும் பார்னெட் ஷேல் (Woodford & Barnett Shales) படிமங்கள் என அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. 

இந்த எரிவாயு இருப்பு, ஒட்டுமொத்த அமெரிக்காவின் 10 மாதத் தேவையைப் பூர்த்தி செய்யக்கூடியது. சுமார் 20,000 அடி ஆழத்தில் அமைந்துள்ள இந்தப் படிமங்களை, நவீன தொழில்நுட்பங்கள் மூலம் தற்போது பிரித்தெடுக்க முடியும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இது உலக எரிசக்தி சந்தையில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks