ஞாயிறு, 18 ஜனவரி, 2026

வவுனியாவில் அவசரமாக கூடிய சங்கு கூட்டணி!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் முக்கியஸ்தர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் ஒன்று நடைபெறுகின்றது. 


 வவுனியா தனியார் விருந்தினர் விடுதியில் இன்று (18) இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுவருகின்றது. 2026ஆம் ஆண்டில் கூட்டணியின் அரசியல் நகர்வுகள் தொடர்பாகவும், மாகாணசபை தேர்தல் உட்பட பல்வேறு விடயங்கள் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் கூட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சுரேஸ் பிரேமசந்திரன், மு.சந்திரகுமார் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் செயலாளர் நா.ரட்ணலிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் க.துளசி, முன்னாள் வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவநேசன் உட்பட முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை தமிழினத்தின் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள தமிழ்த் தேசியக் கட்சிகளுக்குள் ஒற்றுமை தேவை என்று ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் உத்தியோகபூர்வ பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks