சனி, 3 ஜனவரி, 2026

தையிட்டியில் நிறுவ கொண்டுவரப்பட்ட புத்தர் சிலை இராணுவ சிற்றுண்டிச்சாலையில் !


யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் அமையப்பெற்றுள்ள விகாரையில், சட்டவிரோதமான முறையில் புதிய புத்தர் சிலை ஒன்றைப் பிரதிஷ்டை செய்ய முயன்ற நடவடிக்கை காவற்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.இன்று சனிக்கிழமை பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, சீகிரியா பகுதியில் இருந்து புதிய புத்தர் சிலை ஒன்றைக் கொண்டு வந்து தையிட்டி விகாரையில் நிறுவுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. 

இதற்கு தமிழ் தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன.விகாராதிபதியின் அறிவிப்பையும் மீறி, இன்று ஒரு பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினர் புத்தர் சிலையுடன் காங்கேசன்துறை பகுதியில் உள்ள இராணுவத்தினரின் சிற்றுண்டிச்சாலையில் இரகசியமாகத் தங்கியிருப்பதாக காவற்துறையினருக்குத் தகவல் கிடைத்தது. 

உடனடியாகச் செயற்பட்ட காங்கேசன்துறை காவற்துறையினர்: குறித்த சிற்றுண்டிசாலைக்கு விரைந்து அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலையை மீட்டனர். சிலையைக் கொண்டு வந்த பௌத்த பிக்கு உள்ளிட்ட குழுவினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

 தற்போது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காவற்துறையினர் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர். தையிட்டி பகுதியில் இந்தச் சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks