வியாழன், 4 டிசம்பர், 2025

30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பயணத்தடையை விாிவுபடுத்தும் அமொிக்கா!!

தேசிய காவல்படை வீரர்கள் மீதான துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகம் 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பயணத் தடையை விரிவுபடுத்தப் பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 


சமீபத்தில், வெள்ளை மாளிகை அருகே ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் அமெரிக்க தேசிய காவல்படை வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் நாட்டவர்களின் அனைத்து குடியேற்றக் கோரிக்கைகளையும் காலவரையின்றி நிறுத்தி வைக்க அமெரிக்கா உத்தரவிட்டது. 

அத்துடன், கிரீன் கார்ட் (Green Card) வைத்திருப்பவர்களின் ஆவணங்களை மறுபரிசீலனை செய்ய ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளாா். ஏற்கெனவே அமெரிக்காவுக்குள் நுழைய 19 நாடுகளுக்குப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது. 

தற்போது, அந்தப் பயணத் தடையை 30க்கும் மேற்பட்ட நாடுகளாக விரிவுபடுத்த ட்ரம்ப் நிர்வாகம் பரிசீலித்து வருகிறது. அதேவேளை உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் கிறிஸ்டி நோயம் (Kristi Noem), இந்தப் பயணத் தடையை 32 நாடுகளுக்கு அதிகரிக்கப் பரிந்துரைத்துள்ளார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks