திங்கள், 22 டிசம்பர், 2025

காற்றில் கலந்திருக்கும் ஆபத்து மக்களுக்கு எச்சரிக்கை!!

வடக்கு, வடமத்திய, வடமேல், மேல் மாகாணங்களில் கடந்த சில நாட்களாக காற்றின் தரம் மிக மோசமாக உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் குணவர்த்தன இதனைத் தெரிவித்துள்ளார். 


 தற்போது காற்றின் மாசடைவு மட்டம் 150 முதல் 200 வரை உயர்ந்துள்ளது. இது ஆரோக்கியமற்ற நிலையாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எல்லை தாண்டிய வளிமாசு நகர்வு தீவிரமடைந்துள்ள வட,கிழக்கு பருவக்காற்று ஆகியவற்றின் தாக்கமே காற்று மாசடைவுக்கான முக்கிய காரணம். கடந்த ஆண்டுகளிலும் இதே காலப்பகுதியில் இவ்வாறான நிலைமை அவதானிக்கப்பட்ட தாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும். காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்கள் (சுவாசக் கோளாறு உள்ளவர்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்கள்) இதனால் உடல் நல பாதிப்புகளை எதிர்கொள்ள நேரிடலாம். பாதிப்புகள் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மருத்துவ ஆலோசனையைப் பெறுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். எனினும், இன்று முதல் காற்று மாசுபாட்டின் தன்மை குறைவடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks