திங்கள், 22 டிசம்பர், 2025

அம்பலாங்கொடை துப்பாக்கிச் சூடு!!

அம்பலாங்கொடை வர்த்தக நிலைய முகாமையாளர் மீது இன்று (22) காலை துப்பாக்கிச் சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

 இதுவரை வெளியாகியுள்ள தகவல்களின்படி, இரண்டு குற்றக் கும்பல்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 

 அத்துடன், துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபரும் குற்றக் கும்பல் உறுப்பினர்களுடன் தொடர்புகளைப் பேணியவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

 சம்பவம் தொடர்பான விசாரணைக்கு அமைய துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள மோட்டார் சைக்கிளை பொலிஸார் மீட்டுள்ளனர்.

அம்பலாங்கொடை குருந்துவத்த - ஆதாதோல வீதியில் கைவிடப்பட்ட நிலையில் இந்த மோட்டார் சைக்கிளை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். சம்பவம் தொடர்பாகவும், சந்தேக நபர்களைக் கைது செய்வதற்காகவும் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks