வெள்ளி, 19 டிசம்பர், 2025

தமிழ்நாட்டில் 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்!!

தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகும் நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு வாக்குகள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளன.தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில், கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணி டிசம்பர் 14ஆம் தேதியுடன் நிறைவு பெற்று இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகிறது.

கடந்த அக்டோபர் மாத கணக்கெடுப்பு படி மொத்தம் 6 கோடியே 41 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 15.2 சதவீதம் பேர் அதாவது 97 லட்சம் பேர் வரை நீக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இதில் சென்னையில் மட்டும் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், அதில் 35.6 சதவீதம் பேர் அதாவது 15 லட்சம் பெயர்கள் நீக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதில் 12 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு நிரந்தரமாக இடம் மாறியவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.அதைத் தொடர்ந்து செங்கல்பட்டில் 7 லட்சம் வாக்காளர்களும், கோவையில் 6 லட்சம் வாக்காளர்களும், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் உள்ள திருப்பூரில் 5 லட்சம் வாக்காளர்களும் நீக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகி உள்ளது. 

அதேபோல், காஞ்சிபுரம், ஈரோடு, திருவள்ளூர், திண்டுக்கல், வேலூர், நெல்லை மாவட்டங்களில் சராசரியாக 15 சதவீத வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks