திங்கள், 8 டிசம்பர், 2025

பிரதமரிடம் 250 மில்லியன் ரூபாய் பணத்தை கையளித்த சந்திரிகா...!

அரசாங்கத்தின் நிவாரண நிதிக்கு பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம் 250 மில்லியன் ரூபாயை வழங்கியுள்ளது. இலங்கையில் ஏற்பட்ட திடீர் அனர்த்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக இந்த நிதி வழங்கப்பட்டுள்ளது.




இந்த நிதியை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவிடம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க கையளித்துள்ளார்.சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பிரதமர் அலுவலகத்தில் இந்நிதி உத்தியோகப்பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஹினிந்தும சுனில் சேனவி மற்றும் பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks