இளமை, ஆளுமை மற்றும் அவரது தலைமுறைக்கே உரித்தான சமூக ஊடக இணக்கம் ஆகியவற்றை அவர் கொண்டிருக்கிறார்.
அவரது இனம் கட்சியின் அடித்தளத்தின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. அவர் ஒரு அரசியல் போராட்டத்திலிருந்து பின்வாங்கவில்லை. அத்துடன், இலவச குழந்தை பராமரிப்பு, பொது போக்குவரத்து விரிவாக்கம் மற்றும் தடையற்ற சந்தை கட்டமைப்பில் அரசாங்க தலையீடு போன்ற இடதுசாரி கருத்துகளை அவர் ஆதரித்துள்ளார்.
சமீபத்தில் ஜனநாயகக் கட்சியிலிருந்து விலகிச் சென்ற தொழிலாளர் வர்க்கத்தைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு முன்னுரிமையாக இருந்த பொருளாதாரப் பிரச்னைகளில் கவனம் செலுத்தும் திறனையும் மம்தானி வெளிப்படுத்தியுள்ளார். அவர் இடதுசாரிகளின் கலாசாரக் கொள்கைகளை மறுக்கவில்லை.ஆனால் பரந்துபட்ட அமெரிக்காவில் இத்தகைய வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட முடியாதவர் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தன்னைத் தானே சோசலிஸ்ட் என்று கூறிக் கொண்டவரை ஜனநாயகக் கட்சியின் தீவிர இடதுசாரி முகமாக குடியரசுக் கட்சியினர் மாற்றியுள்ளனர். ஆனாலும், செவ்வாய்க்கிழமை இரவு நியூயார்க் நகரில், அவர் ஒரு வெற்றியாளராக இருந்தார்.
மேயர் தேர்தலில் மம்தானியின் பரப்புரை மிகப்பெரிய அளவில் ஊடக கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய நகரத்திற்கான மேயர் தேர்தலைக் காட்டிலும் ஒருவேளை இது அதிகமாக இருக்கலாம்.
மேயராக, அவரது வெற்றிகள் மற்றும் தோல்விகள் உன்னிப்பாக ஆராயப்படும் என்பதையும் இது குறிக்கிறது.
12 ஆண்டுகளுக்கு முன்பு, நியூயார்க் நகரத்தின் பொருளாதார மற்றும் சமூக ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்யும் ஒரு தளத்தில் மேயர் பதவிக்கான போட்டியில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பில் டி ப்ளாசியோ வெற்றி பெற்றார்.
மம்தானியைப் போலவே, இடதுசாரி அமெரிக்கர்களும் அவரது நிர்வாகம் திறமையான தாராளமய நிர்வாகத்திற்கு ஒரு தேசிய எடுத்துக்காட்டாக இருக்கும் என்று அதிக நம்பிக்கை கொண்டிருந்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக