இம்மாநாடு, அக்டோபர் 7 முதல் 9 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறும். இம்மாநாடு தமிழ்நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் வான்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்துறை சூழலுடன் இத்துறை சார்ந்த சர்வதேச நிறுவனங்களை இணைக்கும் முக்கிய தளமாக விளங்கும்.
தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பாதுகாப்பு தொழில்துறை வழிதடத் திட்டம், இத்துறையில் சர்வதேச அளவில் கூட்டு திட்டங்கள்,
முதலீடு மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும். தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை வழித்தட திட்டம் செயல்படுத்தத் தொடங்கியதிலிருந்து இதுவரை 23,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு, இதில் 5,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளது.
2032-ஆம் ஆண்டிற்குள் 75,000 கோடி ரூபாய் இலக்கை அடைய தமிழ்நாடு முன்னேறி வருகிறது.
செப்டம்பர் 19-இல் Cochin Shipyard மற்றும் Mazagon Dock Shipbuilders ஆகிய இரண்டு நிறுவனங்களுடன் தலா 15,000 கோடி ரூபாய் முதலீட்டில் புதிய கப்பல் கட்டும் தளங்கள் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளது.
இத்திட்டங்கள், தமிழ்நாட்டின் கடலோரப் பொருளாதாரத்தில் ஒரு முக்கிய அம்சமாக விளங்கி மாநிலத்தை கப்பல் உற்பத்திக்கான உலகளாவிய மையமாக மாற்றும். இதன்மூலம் 10,000 பேர் நேரடியாகவும், 50,000 பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பினை பெறுவார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக