இதில், பிரான்சின் மதிப்பு மிக்க அரச குடும்ப நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதை தொடர்ந்து அருங்காட்சியகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
உலகில் அதிக சுற்றுலாப் பயணிகளை வரும் இந்த அருங்காட்சியகத்தில் பட்டப்பகலில் நுழைந்த கொள்ளையர்கள் மிகவும் விலையுயர்ந்த 8 நகைகளை திருடிவிட்டு ஸ்கூட்டர்களில் தப்பிச் சென்றனர்.ஞாயிற்றுக்கிழமை பார்வையாளர்களுக்காக அருங்காட்சியகம் திறந்த சில நிமிடங்களிலே 09:30 மணியிலிருந்து 09:40 மணிக்குள் இந்த கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
நான்கு கொள்ளையர்கள் வாகனத்தில் பொருத்தப்பட்ட இயந்திர ஏணியைப் பயன்படுத்தி செய்ன்(Seine) நதிக்கு அருகே உள்ள பால்கனி வழியாக அருங்காட்சியகத்தின் அப்போலோ காட்சி கூடத்தை அடைந்தனர்.வாகனத்தில் பொருத்தப்பட்ட ஏணி ஒன்று முதல் தளத்தின் ஜன்னல் வரை இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களின் மூலம் காண முடிகிறது.
இரண்டு கொள்ளையர்கள் பேட்டரியால் இயங்கும் கட்டர்களைப் பயன்படுத்தி கண்ணாடி தகட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளனர்.
பின்னர் அங்கு பணியிலிருந்த காவலர்களை அச்சுறுத்தி அந்த தளத்தை காலி செய்ய வைத்துவிட்டு, இரண்டு காட்சி பெட்டிகளில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக