திங்கள், 20 அக்டோபர், 2025

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 18 பெண்கள் கைது!

இவ்வாண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் இதுவரையிலான காலப்பகுதியில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களைச் சேர்ந்த 18 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இஷாரா செவ்வந்தியின் கைதையடுத்து இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் நெருங்கிய தொடர்புகளைப் பேணி ஆயதக் கடத்தல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற குற்றங்களுக்கு உடந்தையாக இருந்துள்ளமை விசாரணைகளில் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட பல பெண்கள் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புபட்டுள்ள நிலையில் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களின் போது, குற்றக் குழுக்களுக்கு உடந்தையாகவும் செயல்பட்டுள்ளனர். 

கணேமுல்ல சஞ்சீவ கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் கடந்த 14 ஆம் திகதி, இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank You Google

Thank You Google
Thanks