புதன், 23 ஜூலை, 2025

பிரித்தானிய "இதுதான் எமது தேசியக்கொடி"

படத்திலுள்ள பிள்ளை பிரித்தானியாவில் கல்வி பயில்கிறது. இந்தப்பிள்ளை எங்களது தேசியக்கொடியைத் தனது பாடசாலைக்கு எடுத்துச்சென்று "இதுதான் எமது தேசியக்கொடி" என அங்கே அறிமுகஞ்செய்திருக்கிறது. இதைக்கண்ட இந்தப்பிள்ளையின் ஆசிரியர், அந்தப்பிள்ளையை அச்சுறுத்தி, இக்கொடியை இனிப்பாடசாலைக்கு எடுத்துவரக்கூடாதென்று கூறியிருக்கிறார். 


ஆனால் அந்தப்பிள்ளையோ இது எனது தேசியக்கொடி, எனத்திரும்பத் திரும்பக்கூறியும் ஆசிரியர் அதைச்செவிமடுக்காமல் கொடியை அந்தப்பிள்ளையிடமிருந்து அகற்றியுள்ளார். இந்தப்பிள்ளையின் பெற்றோர் உடனே பாடசாலை நிர்வாகத்திற்குத் தொடர்புகொண்டு, "இது எமது தேசியக்கொடி, இதை அவமதித்த ஆசிரியர் உடனே மன்னிப்புக்கோரவேண்டும்" என வலியுறுத்தியுள்ளனர். 

சமவேளையில்; பிரித்தானிய நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் உமா குமரன் அவர்களுக்கும் இது தொடர்பில் கடிதம் அனுப்பியுள்ளனர். "மன்னிக்கவும், இது எனது பஞ்சாயத்து எல்லைக்குள் வராது" என மழுப்பிய பதிலோடு உமா கழன்றுவிட்டார். அவ்வாறே; போலித்தேசிய வேடம் பூண்டபடி, மேற்குலகின் அடிவருடியாக இயங்கும் TamilGuardian இற்கும் இது தொடர்பாக செய்தி அனுப்பியும் அவர்கள் இன்றுவரை அதைவெளிப்படுத்தவில்லை.



அமெரிக்காவோ பிரித்தானியோ விருப்பப்படாத செய்தியை அவர்கள் எப்படிப் பிரசுரிப்பார்கள் ? இறுதியில் கனடாவிலுள்ள Voice of Global Tamil Rights - உலகத்தமிழர் உரிமைக்குரல் அமைப்பினருக்கு இது தொடர்பில் தகவல் கிடைக்க, உடனடியாக அந்தப்பாடசாலைக்கும், தொடர்புபட்ட ஆசிரியருக்கும் எமது தேசியக்கொடி பற்றி விளக்கமாகக் கடிதம் அனுப்பியுள்ளனர். 

எமது தேசியக்கொடியை அவமதித்த ஆசிரியர் மன்னிப்புக்கோரவேண்டும் என்பதில் குழந்தையின் பெற்றோர் இறுக்கமாக உள்ளனர். அவ்வாறே குழந்தைக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானத்திற்கும் அந்தப் பாடசாலை நிர்வாகம் மன்னிப்புக்கோரவேண்டும். இது தொடர்பில் மேலதிக விடயங்கள், அல்லது அடுத்த நகர்வு என்ன என்பதை விரைவில் அறியத்தருகிறோம்.

இது ஒரு முகப்புத்தகத்தின் பிரதியாக்கம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக