திங்கள், 21 ஜூலை, 2025

யாழ் கசூரினா கடற்கரையில் தீ!

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளங்களில் ஒன்றான கசூரினா கடற்கரையில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு (20.07.21) பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிந்து கடற்கரைக்கு விரைந்த பிரதேச சபையினர் , கடற்படையினர் ஆகியோர் நீண்ட போராட்டத்தின் பின் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

குறித்த தீ விபத்தில் கடற்கரையில் காணப்பட்ட சவுக்கு மரங்கள், பனை மரங்கள் என்பன தீயில் கருகி நாசமாகியுள்ளது தீ விபத்துக்கான காரணம் தெரியவராத நிலையில், காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக